மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் ஒரு கோடி நுகர்வோர்களுக்கு மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை என்று மின் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
ஜுலை 1ம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தி உத்தர விட்டுள்ளது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம். இதன்படி ஜூலை மாதம் முதல் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு புதிய கட்டணம் கணக்கிடப்படும் என்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மின்வாரியம் அளித்துள்ள விளக்கத்தில், மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் ஒரு கோடி நுகர்வோர்களுக்கு மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
Also Read: நவீன இந்தியர்கள் யாருடைய வம்சாவளியினர்? ஆரியர்களா? திராவிடர்களா?
அதிகரித்து வரும் நிதி இழப்பை ஈடு செய்வதற்காக மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள மின்வாரியம், அனைத்து மின் இணைப்புகளுக்கும் உயர்த்தப்பட வேண்டிய 4.7 சதவிகித மின் கட்டண உயர்வுக்கு எதிராக மின் நுகர்வோரின் நலனை கருத்தில் கொண்டு 2.18 சதவிகிதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது என்றும், வீடுகளுக்கான 2.18 சதவிகித மின் உயர்வும் முழுவதுமாய் அரசே மின் மானியம் மூலமாக ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின் படி 6% வரையிலும் மின்சார கட்டணம் உயர்த்தப்படுவதற்கான வழி இருந்தும் 2.18 சதவிகிதம் மட்டுமே சென்ற ஆண்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த 4.83 சதவிகிதம் மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். ஆனால், பொதுமக்களுக்கும் தொழில் முனைவோருக்கும் சிறிய அளவில் மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் மின் வாரியம் தெரிவித்துள்ளது.
மின் கட்டண உயர்வில் சில முக்கிய அம்சங்கள் உள்ளன. அதில் முக்கியமானது; தமிழகத்தில் உள்ள 2.47 கோடி வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோரில் ஒரு கோடி நுகர்வோர்களுக்கு மின் கட்டண உயர்வு எதுவும் இல்லையாம்.
Also Read: நவீன இந்தியர்கள் யாருடைய வம்சாவளியினர்? ஆரியர்களா? திராவிடர்களா?