டாடா மோட்டார்ஸ் செவ்வாயன்று தனது மின்சார வாகன மாடல்களான Nexon.ev மற்றும் Tiago.ev ஆகிய இரண்டு மாடல்களின் விலையை 1.2 லட்சம் ரூபாய் வரை குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி மின் வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ், 1.2 லட்சம் ரூபாய் வரை விலை குறைப்பு செய்துள்ளதால், இப்போது Nexon.ev கார் மாடலின் விலை ரூ.14.49 லட்சத்தில் தொடங்குகிறது.
Tiago.ev கார் மாடலின் விலையை ரூ.70,000 வரை kuraikkappattulladhaal, இந்த மாடலின் அடிப்படை விலை ரூ.7.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது என்று டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.
ஒரு மின் வாகனத்தின் ஒட்டுமொத்த செலவில் பேட்டரி செலவுகள் கணிசமான ஒரு பகுதியாக பங்களிக்கிறது.
‘சமீப காலமாக பேட்டரி செல்களின் விலை குறைந்துள்ளதாலும், எதிர்காலத்திலும் விலை குறையும் என்பதைக் கருத்தில் கொண்டும், மின் வாகனங்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக, டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி (TPEM) தலைமை வர்த்தக அதிகாரி விவேக் ஸ்ரீவத்சா தெரிவித்துள்ளார்.
மின் வாகனங்கள் துறை வலுவான வளர்ச்சி வெளிப்படுத்தி வருவதாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டில், இந்திய மின் வாகனங்கள் துறை சுமார் 90 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சிய அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.