
என்னை துன்புறுத்துகிறார்கள். மன உளைச்சலில் இருக்கிறேன். யாராவது உதவி செய்யுங்கள் என்று கண்ணீர் விட்டு பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார் பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா.
ஜார்கண்ட் மாநிலத்தில் பிறந்த தனுஸ்ரீ தத்தா, கல்லூரிப்படிப்பை முடித்த பின்னர் மாடலிங் துறையில் புகுந்தார். 2004இல் அழகி போட்டியில் ‘மிஸ் இந்தியா’ பட்டம் வென்றார். 2005இல் ‘சாக்லேட்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்து இவர் நடித்த ‘ஆஷிக் பனாயா அப்னே’ படம் ஹிட் அடித்தது. தொடர்ந்து 2010 வரையிலும் பல படங்களில் நடித்து வந்தார். தமிழில் விஷாலுடன் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தில் நடித்தார்.

முன்பு இவர் அதாவது கடந்த 2022இல் பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். 2008இல் ’ஹார்ன் ஓகே ப்ளஸ்’ இந்தி படத்தின் படப்பிடிப்பில் நானே படேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று மும்பை போலீசில் புகாரளித்து பரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
அதன் பின்னர் அவர் தனது சமூக வலைத்தளத்தில், ந நானா படேகர் மீது பாலியல் புகார் சொன்னதால் தனக்கு ஏதாவது ஆகிவிடும் என்றும், அப்படி ஏதாவது ஆனால் அதற்கு நானா படேகரும், அவரது பாலிவுட் மாமியா நண்பர்களும்தான் காரணம் என்று சொல்லி பரப்பை ஏற்படுத்தி இருந்தார். அந்த வழக்கில் சட்டமும் நீதியும் தன்னை தோற்கடித்ததாக கூறி இருந்தார்.
கடந்த 2024இல் மலையாள சினிமாவை அதிரவைத்த 233 பக்கங்கள் கொண்ட ‘ஹேமா’ கமிட்டி அறிக்கையால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை என்று பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இந்நிலையில், மீடூ புகார் கொடுத்ததில் இருந்து சொந்த வீட்டிலேயே தான் துன்புறுத்தப்பட்டு வருவதாகவும், இதனால் மிகவும் சோர்ந்துவிட்டதாகவும், தற்போது மன உளைச்சலில் இருப்பதாகவும், தன்னை இந்த நிலையில் இருந்து மீட்க யாராவது உதவி செய்யும்படியும் கண்ணீருடன் பேசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
அதே நேரம் தனது இந்த நிலைமைக்கு காரணமானவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் தனுஸ்ரீ தத்தா.