பிரதமர் மோடி உடனான கட்டுமானத் தொழிலதிபர் பிமல் படேலின் நெருங்கிய தொடர்பை விவரித்து The Caravan செய்தி நிறுவனம் ஆவண அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அரசின் முக்கிய கட்டுமானத் திட்டங்களில் பிமல் படேலின் பங்கையும், படேலின் பணி குறித்து The Caravan விமர்சனம் செய்துள்ளது.
மோடியுடனான படேலின் தொடர்பு, முக்கிய பொதுத் திட்டங்களில் வெளிப்படைத்தன்மை இல்லாமை பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
குஜராத் முதல்வராக இருந்த காலக்கட்டத்தில் மோடி பல்வேறு திட்டங்களை படேலுக்கு கொடுத்து வந்தது பிரதமரான பிறகும் அதை தொடர்ந்து வருகிறார்.
தனது கட்டுமானங்களில் இந்திய நகரங்களின் பாரம்பரியம் மற்றும் பொது இடங்களைப் பாதுகாக்க படேல் தவறுவதாக The Caravan குற்றம்சாட்டியுள்ளது.
பிரதமர் மோடியின் சிந்தனையை மட்டுமே படேல் தனது கட்டுமானங்களில் பிரதிபளிப்பதாகவும், அரசின் துறை அதிகாரிகளிடம் கலந்தாலோசித்தது இல்லை என The Caravan கூறியுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டுமானத் திட்டமான சென்ட்ரல் விஸ்டா திட்டம் அறிவிக்கப்பட்ட சில வாரங்களில் அந்த மகத்தான பணியை வழிநடத்தும் கட்டிடக் கலைஞராக படேல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் விவரங்கள் பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை என்றும் ஆனால் தனது எண்ணத்தை கட்டிடம் பிரதிபலிக்க வேண்டும் என்பதில் மோடி தெளிவாக இருந்ததாக The Caravan கூறியுள்ளது.
இத்திட்டத்திற்காக காங்கிரஸ் ஆட்சிகாலத்து பழமையான 12 கட்டிடங்களை இடித்த படேல், மோடியின் இந்து தேசியவாத சிந்தனைகளை அமல்படுத்தியுள்ளார்.
பீமல் படேலுடன் இணைந்து கட்டுமானத் திட்டங்கள் மூலம் முன்பிருந்த அரசுகளின் மரபுகளைக் குறைத்து, அதற்குப் பதிலாக தன்னை முன்நிறுத்திக்கொள்ள மோடி தனது அஜண்டாவாக வைத்துள்ளதாக, The Caravan விமர்சித்துள்ளது.