விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரையிலும் அதிமுக கூட்டணியில் தவெக வரும் என்று ரொம்பவே எதிர்பார்ப்புடன் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் விஜயோ ஆரம்பத்தில் இருந்து அதாவது விக்கிரவாண்டி மாநாட்டில் இருந்து நேற்று நடந்த ஈரோடு மாநாட்டு வரையிலும் திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி என்ற பிம்பத்தை கட்டமைத்து வருகிறார்.
இதற்கு ரொம்பவெ காட்டமாக பதிலளித்து பேசவேண்டிய எடப்பாடி பழனிசாமி மவுனமாக இருந்து வருகிறது அதிமுக தொண்டர்களை வேதனையில் ஆழ்த்தி இருக்கிறது.

ஒரு அடிமட்ட அதிமுக தொண்டர், அதிமுக முன்னாள் எம்.பி. கேசி.பழனிசாமிக்கு மனம் நொந்து பேசி அனுப்பிய ஆடியோவை வெளியிட்டிருக்கிறார் கே.சி.பழனிசாமி.
அதில், ’’அண்ணே… விஜய் திரும்பத்திரும்ப எங்களுக்கும் திமுகவுக்கும்தான் போட்டின்னு சொல்லுறா… தமிழ்நாட்டு மீசை வச்ச அண்ணா திமுக காரன் எவனுமே இல்லையா அண்ணே…! எடப்பாடி பழனிசாமி இதுக்கு பதில் சொல்லணுமில்ல. மனசு ரொம்ப கஷ்டமா இருக்குன்னே…!’’ என்று இருக்கிறது.
எப்படியும் கதிகலங்கித்தான் போயிருப்பார். ஆனாலும் இதற்கு என்ன சொல்லப்போகிறார் எடப்பாடி?
