பிரபல சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரியின் மரணம் நிகழ்ந்து ஓரிரு வாரங்களே ஆகியிருக்கும் நிலையில் மற்றுமொரு சின்னத்திரை நடிகை நந்தியின் மரணம் சின்னத்திரை வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிப்பரப்பாகி வரும் ‘கௌரி’ சீரியலில் துர்கா மற்றும் கனகா என்று இரு பாத்திரங்களில் நடித்து வந்தார் நடிகை நந்தினி. ஆந்திராவை பூர்வீகமாக் கொண்டவர் நந்தினி.

தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட நந்தினி, கன்னடத்தில் பல சீரியல்களில் நடித்து புகழ் பெற்றிருந்தார். இதன் மூலம்தான் கௌரி சீரியல் வாய்ப்பு வந்துள்ளது.
முதல் தொலைக்காட்சி தொடரிலேயே இரட்டை வேடம் கிடைத்து, அதில் சிறப்பாக நடித்து ரசிகர்கள் ஆதரவை பெற்றார். இந்த சீரியல் படப்பிடிப்பு முதலில் பெங்களூருவில் நடந்ததால் நந்தினியும் பெங்களூருவில் கோட்டூரு பகுதியில் தங்கி இருந்தார்.
தற்போது சென்னைக்கு படப்பிடிப்பு மாறியதால் சென்னைக்கு வந்து நடித்துக்கொடுத்தார். படப்பிடிப்பு தற்போது இல்லாததால் பெங்களூருவுக்கு சென்றிருந்தார்.

திங்கட்கிழமை அன்று பெங்களூருவில் தான் தங்கி இருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இறப்பதற்கு முன்பு நந்தினி எழுதிய கடிதத்தை கைப்பற்றி உள்ளனர்.
திருமணம் ஆகாத நந்தினியை பெற்றோர் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி வந்ததாகவும், அதற்கு மனதளவில் தான் தயாராகவில்லை என்றும் , இதனால் தான் மன உளைச்சலில் இருந்ததாகவும் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் நந்தினி.
