இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவே இல்லை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. தொகுதிப்பங்கீடு மற்றும் கூட்டணிக்குள் ஓபிஎஸ், தினகரன் போன்றோரை கொண்டு வருவருவது பேச்சுவார்த்தை நிறைவடையாததால் தானே நேரில் முன்னின்று பேசியால் சங்கடம் வருவதை தவிர்க்கவே தன் சார்பில் எஸ்.பி.வேலுமணியை அனுப்பி இருக்கிறார் எடப்பாடி.
அமித்ஷாவுடனான இரண்டு நாள் சந்திப்பிலும் அமித்ஹாவுக்கும் எடப்பாடிக்கும் இடையே ஒரு பாலமாக இருந்திருக்கிறார் வேலுமணி. ஆனாலும் பேச்சுவார்த்தை இன்னமும் நிறைவடையவில்லை. எடப்பாடி ஒரு முடிவிலும் அமித்ஷா ஒரு முடிவிலும் இருப்பதால் இவர்கள் ஒரே பாதையில் பயணிப்பது என்பது அவ்வளவு எளிதல்லவே.

இது நடக்கிறபடி நடக்கட்டும் என்று சொல்லிவிட்ட அமித்ஷா, அதுவரையிலும் சும்மா இருக்க கூடாது. திமுக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வேலைகளை செய்ய வேண்டும் என்று சொல்ல, திமுக அரசு மீதான ஊழல் புகார் பட்டியல் அதிமுக சார்பில் தயார் செய்து வைத்திருப்பதைச் சொல்ல, முதலில் இதைச்செய்யுங்கள். நாளையே இதை செய்து முடியுங்கள் என்று ஆணையிட்டிருக்கிறார். அதன்படியே இன்று ஆளுநர் மாளிகை சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அந்த பட்டியலைக் கொடுத்திருக்கிறார் எடப்பாடி.
