கடைசி படம் என்பதால் அதிகம் கல்லா கட்டலாம் . இதன் மூலம் உச்ச நடிகர் என்பதை நிரூபித்துவிட்டு முழுநேர அரசியலுக்கு செல்லலாம் என்று விஜய் நினைத்திருந்த நிலையில், சிவகார்த்திகேயன் அதற்கு தடை போட்டுவிட்டார்.
ஜனநாயகன் பொங்கலுக்கு வரும்போது பராசக்தியும் வருவதால் ஜனநாயகனின் வசூல் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டது. ஏற்கனவே இப்படம் தெலுங்கில் வந்த பகவந்த் கேசரி எனும் பாலய்யா படத்தின் ரீமேக் என்பதால் படத்திற்கு போதிய வரவேற்பு இல்லாமல் இருக்கிறது. அதனால்தான் ஜனநாயகன் படத்தின் டிரைலரை பராசக்தி படதின் டிரைலர் முந்தி ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் படமும் வெளிவந்தால், டிரைலர் மாதிரியே சினிமாவும் பராசக்தியிடம் தோற்றுப்போய்விட்டால் 33 வருடங்களாக சினிமாவில் சம்பாதித்து வைத்த இடத்தை பறிகொடுத்துவிட்டு விலக வேண்டியதாகிவிடும் என்பதால் படக்குழுவுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டியிருக்கிறாரா விஜய்? என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர்.
தணிக்கை சான்றிதழ் கோரி அனுப்பப்பட்ட ஜனநாயகன் படத்தை கடந்த 19ம் தேதி அன்று தணிக்கைக்குழு அதிகாரிகள் பார்த்துள்ளனர். படம் பார்த்து முடித்த பின்னர் இப்படத்தில் 6 இடங்களில் கட் கொடுத்திருக்கிறார்கள். அந்த 6 இடங்களில் சரி செய்து கொடுத்தால், குறிப்பாக மத உணர்வுகளை புண்படுத்தும் அந்த குறிப்பிட்ட காட்சியை நீக்கினால் U/A சான்றிதழ் வழங்கப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் படக்குழுவோ அந்த காட்சியை நீக்காமல் மறு தணிக்கைக்கு படத்தை அனுப்பி வைத்திருக்கிறது. இதனால் விஜய் திட்டமிட்டபடி தணிக்கைக்குழு சான்றிதழ் வழங்காமல் உள்ளது.

இதன்பின்னர் தணிக்கைக்குழு சான்றிதழ் தர மறுப்பதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது படக்குழு. இன்று விசாரணைக்கு வந்தபோது நாளை விசாரணை தள்ளி போடப்பட்டிருக்கிறது. 9ம் தேதி படம் ரிலிசாகிறது என்று டிக்கெட் புக்கிங் நடந்திருக்கும் நிலையில் நாளை 7ம் தேதி விசாரணை என்றால் இதன் மூலம் படம் வெளியாவதில் தானாகவே சிக்கல் வரும். களத்தில் போட்டி போட்டு நிற்கும் பராசக்திக்கு வழிவிட்டு அடுத்து மங்காத்தா ரீரிலீஸ் என்று வரும் அஜீத்துடன் களமிறங்கலாம் என்று நினைக்கிறார் விஜய். அவர் நினைத்தது மாதிரியே நடந்தால் சிவகார்த்திகேயனிடம் தோற்றுப்போன வரலாறு இருக்காது என்று நினைக்கிறார். அதே நேரம் டிக்கெட் புக்கிங் செய்திருப்போருக்கு திரும்பவும் பணத்தை கொடுத்துவிடவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. பராசக்தியிடம் இருந்து தப்பிக்க விஜய் எடுத்த முடிவுதான் இது என்கிறது கோலிவுட் வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்.
