காலாவதியான தேர்தல் பத்திரங்களை மோடி தலைமையிலான பாஜக அரசு சட்டவிரோதமாக பணமாக்கியுள்ளது என்கிற அதிர்ச்சியூட்டும் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் 17-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட புதிய தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களின் படி, கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு சில காலம் முன்பு காலாவதியான தேர்தல் பத்திரங்களை பாஜக சட்டவிரோதமாக பணமாக்கி இருப்பது தெரியவந்துள்ளது.
தேர்தல் பத்திரங்களை பணமாக்க 15 நாள்கள் மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு கால அவகாசம் உண்டு என விதி உள்ளது.
இந்த சூழலில், கால அவகாச விதியை மீறி பாஜக அரசு 10 கோடி மதிப்பிலான காலாவதியான பத்திரங்களை பணமாக்க SBI வங்கிக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.
Screenshot of Electoral Bonds documents released by ECI
கடந்த 2018-ம் ஆண்டு மே 3 மற்றும் மே 5 ஆகிய தேதிகளில் வாங்கப்பட்ட சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை பணமாக்க பாஜக முயற்சித்துள்ளது.
காலாவதியான பத்திரங்களை பணமாக்க அப்போதைய அருண் ஜெட்லி தலைமையிலான நிதி அமைச்சகம், SBI வங்கியிடம் தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்தி அழுத்தம் கொடுத்தது.
தொடக்கத்தில், SBI நிர்வாகம் மறுப்புத் தெரிவித்த நிலையில், பாஜக அரசின் தொடர் அழுத்தத்தால் 2018 மே 5 அன்று வாங்கப்பட்ட 10 கோடி ரூபாய் மதிப்பிலான காலாவதியான தேர்தல் பத்திரங்களை ‘மே 23’ அன்று பணமாக்கி உள்ளது.
கடந்த 2019-ல் The Reporters Collective செய்தி இணையதளம் இது குறித்த சந்தேகத்திற்குறிய செய்தியை வெளியிட்டிருந்த நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்ட இந்த புதிய ஆவணத்தில் பாஜகவின் இந்த சட்டவிரோத செயல் அம்பலமாகியுள்ளது.
தேர்தல் பத்திர விதிகளை மீறியும், அரசியல் கட்சிகளுக்கான நிதியளிப்பில் நேரடி அரசாங்கத் தலையீடுகள் இருந்திருப்பது குறிப்பிடத்தக்க கவலைகளை எழுப்புவதாக The Reporters Collective அச்சம் தெரிவித்துள்ளது.
மேலும், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான பிரத்யேக அடையாள எண்கள் நாளை மறுநாள் (மார்ச் 21) வெளியானதும் பாஜகவின் நன்கொடையாளர்கள் யார் என்பதை கண்டறிய முடியும் என The Reporters Collective கூறியுள்ளது.
The Reporters Collective Article Link: Modi Gov’t Allowed BJP to Illegally Encash Expired Electoral Bonds