The Wire செய்தி நிறுவனம் வெளியிட்ட கட்டுரையின் மொழிபெயர்ப்பு
இந்தியாவின் தேர்தல் பத்திரங்கள் திட்டம் ‘சட்டவிரோதமானது’ என்று கடந்த பிப்ரவரி 15-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இது சர்வாதிகாரத்தை எதிர்ப்பவர்களுக்கு நீதிமன்றத்திடம் இருந்து கிடைத்த ஒரு அரிய வெற்றி என்றாலும், கடந்த பொதுத் தேர்தல் உட்பட பல தேர்தல்கள் இந்த சட்டவிரோத நிதியில்தான் நடத்தப்பட்டு இருக்கின்றன.
இப்பிரச்சினையை முன்பே விசாரித்து தீர்ப்பளித்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்; ஆனால் நீதிமன்றம் அவ்வாறு செய்யக்கூடாது என்று முடிவெடுத்தது என்பதே உண்மை.
ராஜ்யசபா பதவியைப் பெற்றுள்ள முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், இந்த விவகாரத்தில் தீர்ப்பளிக்க தாமதம் செய்தது ஏன் என்று கேட்டபோது, இந்தப் பிரச்சினை தனது நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வந்தது தனக்கு நினைவில் இல்லை என்று கூறினார்.
‘தேர்தல் பத்திரங்கள் திட்டம்’ எவ்வளவு கொடூரமானது என்று பலருக்குத் தெரியாது, அவர்களின் நலனுக்காக தான் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளதாக, The Wire கூறியுள்ளது.
இத்திட்டம் 2017 மத்திய பட்ஜெட் மூலம் நரேந்திர மோடி அரசால் அறிவிக்கப்பட்டது. மறைமுக நன்கொடையாளர்கள் மூலம் அரசியல் கட்சிகள் பணத்தைப் பெறுவதற்கான ஒரு வழியாக இந்த பத்திரங்கள் இருக்கும்.
பத்திரத்தை வாங்கும் போது நன்கொடையாளர் தனது அடையாளத்தை வங்கியில் தெரிவிக்க வேண்டும், ஆனால் பத்திரத்தில் அந்த அடையாளம் காட்டப்படாது.
பணத்தை யார் கொடுத்தார்கள்? என்பதை தெரிவிக்காமல், அரசியல் கட்சிகள் பணத்தை ஏற்கலாம். எனவே, அரசியல் கட்சிகளுக்கு யார் நிதி அளித்து செல்வாக்கு செலுத்துகிறார்கள் என்பதை வாக்காளர்கள் அறிய மாட்டார்கள்.
இந்த திட்டம், வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் கூட தங்களது நிதி பங்களிப்பை யாருக்கும் தெரிவிக்காமலும், அவர்களின் பெயர்களை வெளியிடாமலும் இந்திய அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க அனுமதிக்கும்.
29 நகரங்களில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி(SBI) கிளைகளில் கிடைக்கும் இந்த தேர்தல் பத்திரங்களை, ஒரு நன்கொடையாளர் அவற்றை தங்கள் வங்கிக் கணக்கு மூலம் வாங்கி, அவர்கள் விரும்பும் கட்சி அல்லது தனிநபரிடம் ஒப்படைக்கலாம், பின்னர் அந்த பத்திரங்களை அரசியல் கட்சிகளால் பணமாக்க முடியும்.
இந்த திட்டத்திற்கு ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் தேவை என்பது தெரியாமலேயே, அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2017 பட்ஜெட்டுக்கு 4 நாட்களுக்கு முன்பு இது குறித்த தகவலை வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கியின் சட்டத்திற்கு இணங்கும் வகையில் ‘முன்மொழியப்பட்ட தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில்’ திருத்தத்தை உருவாக்கி, நிதியமைச்சரின் பார்வைக்காக வரைவு ஒன்று அனுப்பப்பட்டது
அதே நாளில், ஜனவரி 28, 2017, ரிசர்வ் வங்கியின் கருத்துக்களைக் கோரி ஒன்றிய அரசு மின்னஞ்சல் அனுப்பப்பியது.
ஜன.30-ம் தேதி பதில் அனுப்பிய ரிசர்வ் வங்கி, அது ஒரு மோசமான திட்டம் என்றும் ரிசர்வ் வங்கியின் அதிகாரத்திற்கு எதிராக உள்ளதாகவும் கூறியது.
இந்தத் திட்டத்திற்கான ஒரு சிறப்புத் தேவையோ அல்லது நன்மையோ இல்லை என்றும் இந்திய பணத்தின் மீதான நம்பிக்கை குறைத்து மதிப்பிடுவதற்கு இது உட்படலாம் என ரிசர்வ் வங்கி எச்சரித்தது.
மேலும், இந்திய தேர்தல் ஆணையமும் இந்தத் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பை உச்ச நீதிமன்றத்தில் வெளிப்படுத்தி இருந்தது.
தேர்தல் பத்திரங்கள் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய பிறகும் இந்திய தேர்தல் ஆணையம் இச்சட்டத்திற்கு எதிராகவே உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது.
ஒரு வலுவான நிர்வாகி தனக்கு ஏதாவது வேண்டும் என்று முடிவு செய்தால், அது ஆபத்தான மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானதாக இருந்தாலும் கூட, அதைத் தடுக்க மிக சிறிய எதிர்ப்பு மட்டுமே உள்ளது.
இந்தத் திட்டம் அரசியலமைப்புக்கு முரணானது என்று உச்ச நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது; ஆனால், நமது அரசு நிறுவனங்கள் எவ்வளவு பலவீனமாக உள்ளன என்பதையும் ‘தேர்தல் பத்திரங்கள்’ விவகாரம் வெளிப்படுத்தியுள்ளதாக The Wire விமர்சித்துள்ளது.
Original Article: Modi Government’s Tryst with Electoral Bonds Should Neither Be Forgotten Nor Forgiven