தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
கடந்த 2018ம் ஆண்டில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில், கடந்த ஜுலை மாதம் 15ம் தேதி அன்று நடந்த விசாரணையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த காலத்தில் பணிபுரிந்த போலீசார் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விபரங்களை விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில், அதிகாரிகளின் சொத்துக்களை கணக்கீடு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.