அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மகாவிஷ்ணு ஆற்றிய ஆன்மீக சொற்பொழிவு பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதனால் எழுந்த புகாரில் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை வாகனத்தில் ‘Jesus loves you’ எனும் கிறிஸ்துவ மத வாசகம் ஒட்டப்பட்டிருப்பதாக ஒரு போட்டோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆனால், இது தவறான தகவல் என்று அரசு மறுத்துள்ளது. ஒப்பந்த அடிப்படையில் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் தனியார் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஒப்பந்த வாகனங்களில் என்ற ஸ்டிக்கர் ஒட்டினால் பறிமுதல் செய்யப்படும் என்று கடந்த 2021ம் ஆண்டிலேயே போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அந்த எச்சரிக்கை செய்தியிலும் இந்த படம் இடம் பெற்றிருந்தது.
ஒப்பந்த அடிப்படையில் இயங்குகின்ற தனியார் வாகனத்தை அரசு வாகனம் என்று சொல்லி, அதில் கிறிஸ்துவ மத வாசகம் இடம் பெற்றிருப்பதாக தவறான தகவலை பரப்பி வருகிறார்கள் என்று அரசு விளக்கம் அளித்துள்ளது.