பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் பெண்களின் உயர்கல்வியை உறுதி செய்யும் வகையில், அரசுப்பள்ளி மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கின்ற வகையில், திமுக அரசில் புதுமைப்பெண் திட்டம் மூலமாக கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அரசுப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலும் படித்த மாணவிகளின் உயர்கல்வி உதவித்தொகையாக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது அரசு.
இந்த புதுமைப்பெண் திட்டம் என்பது கல்லூரி மாணவிகளுக்கானதே தவிர, பள்ளி மாணவிகளுக்கானது அல்ல. இது தெரியாமல், பேருந்தில் பீர் குடிக்கும் பள்ளி மாணவிகளின் வீடியோவைப் பகிர்ந்து, பேருந்தில் போட்டி போட்டுக்கொண்டு மாணவிகள் பீர் குடிகிறார்கள். புதுமைப்பெண் மூலமாக தந்த ஆயிரம் ரூபாயை டாஸ்மாக் மூலம் வசூல் செய்கிறது அரசு என்று புதுமைப்பெண் திட்டம் மீது களங்கம் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் பரவும் அந்த வீடியோ கடந்த 2022ம் ஆண்டில் மே மாதம் எடுக்கப்பட்டது. ஆனால் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டதோ 2022 செப்டம்பர் மாதம். இந்த திட்டம் கல்லூரி மாணவிகளுக்கானதே தவிர, பள்ளி மாணவிகளுக்கானது அல்ல.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே கடந்த 2022ல் எடுக்கப்படட்து அந்த வீடியோ, மார்ச் மாதம் பேருந்தில் மாணவிகள் பீர் குடித்த வீடியோதான் வலைத்தளங்களில் பரவுகிறது.
இந்த வீடியோ வெளியான போதே பள்ளி கல்வித்துரை தரப்பிலும், குழந்தைகள் நல அலுவலர்கள் தரப்பில் இருந்தும் மாணவிகளுக்கு போதிய மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
அந்த பழைய வீடியோவை, அதுவும் மாணவ, மாணவிகளின் முகத்தை மறைக்காமல் சமூக வலைத்தளங்களில் பரப்புவது சட்டப்பட்டி குற்றம் என்பது கூட தெரியாமல் பரப்புவதாக அரசு தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.