
இந்தியாவில் 1,44,634 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்றன
நாட்டில் மொத்தமுள்ள 892 சுங்கச்சாவடிகளில் 675 சுங்கச்சாவடிகள் பொது நிதியளிப்பு பிரிவின் கீழும், 180 சுங்கச்சாவடிகள் அரசின் சலுகை பெற்றும் செயல்படுகின்றன
தமிழ்நாட்டில் 6,606 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகளில் 78 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன
தனியார் நிறுவனங்களின் மூலம் சுங்க கட்டணம் வசூலித்து வருகிறது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்
தேசிய நெடுஞ்சலைகள் ஆணையத்தின் ஒப்பந்தப்படி ஆண்டுதோறும், 1992ல் போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008ல் போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது

கடந்த 01.04.2025 ல் 40 சுங்கச்சாவடிகளில் 5% முதல் 10% வரையிலும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது
38 சுங்கச்சாவடிகளில் இன்று 01.09.2025 முதல் 5% முதல் 7% வரையிலும் சுங்க கட்டணம் உயர்ந்துள்ளது
2023 -24ல் தமிழ்நாட்டில் ரூ.4,221 கோடி சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.269 கோடி வசூலிக்கப்பட்டு கிருஷ்ணகிரி தொப்பூர் சுங்கச்சாவடி முதலிடத்தில் உள்ளது
சுங்க கட்டணம் உயர்வால் 10% முதல் 15% வரை பொருட்களின் விலை உயரும் – சுமை கூடும் என்பதால் பொதுமக்கள் அச்சம்