அமெரிக்க அதிபர் டிரம்ப் (US President Trump) 1 மில்லியன் டாலர் கோல்டு கார்டு விசாவை அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும், 5 மில்லியன் டாலர் விலையில் பிளாட்டினம் விசாவும் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோல்டு கார்டு விசா திட்டம் :
டிரம்ப் கோல்ட் கார்டு (Trump Gold Card) என்பது ஜனாதிபதியால் தொடங்கப்பட்ட ஒரு புதிய அமெரிக்க விசா திட்டமாகும் . இது நாட்டில் குறிப்பிடத்தக்க நிதியை முதலீடு செய்ய விரும்பும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சட்டப்பூர்வ நிரந்தர அமெரிக்க குடியுரிமைக்கான பாதையையும் வழங்குகிறது. இது 1990 முதல் நடைமுறையில் உள்ள EB-5 விசா திட்டத்தை மாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது. இது வெளிநாட்டினர் அமெரிக்க அரசிற்கு 1 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்குவதன் மூலம நிரந்தரமாக தங்கும் அந்தஸ்தைப் பெற அனுமதிக்கிறது.

டிரம்ப் பிளாட்டினம் விசா திட்டம் :
5 மில்லியன் டாலர் விலையில் டிரம்ப் பிளாட்டினம் விசா (Trump Platinum Visa) திட்டம் அட்டையை வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் ஆண்டுக்கு 270 நாட்கள் வரை தங்க முடியும். மேலும், அமெரிக்காவிற்கு வெளியே ஈட்டிய வருவாய்க்கு அமெரிக்காவில் வரி செலுத்த வேண்டியதில்லை என்பது இதன் சிறப்பம்சமாகும். மேலும் இந்தத் திட்டம் இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படவில்லை என்றும் ஆர்வமுள்ள வெளிநாட்டவர்கள் காத்திருப்புப் பட்டியலில் தங்கள் பெயர்களைச் சேர்க்கலாம் என்று trumpcard.gov என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டிற்கும் உள்ள வேறுபாடு :
டிரம்ப் கோல்டு கார்டு விசா மற்றும் பிளாட்டினம் கார்டு விசாக்கள், அதிக முதலீடு செய்யும் பணக்கார வெளிநாட்டினரை ஈர்த்து, அமெரிக்காவில் குடியேற்ற உரிமையைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட புதிய திட்டங்களாகும். இவற்றின் முக்கிய வேறுபாடு முதலீட்டுத் தொகை மற்றும் முதலீட்டின் வகை. கோல்டு கார்டு விசா அதிக முதலீட்டிற்கு (சுமார் $1 மில்லியன் அல்லது அதற்கு மேல், ரூ. 8.8 கோடிக்கு மேல்) விரைவான குடியுரிமை பாதையை வழங்குகிறது.அதே நேரத்தில் பிளாட்டினம் கார்டு மிக அதிக முதலீடு (பல மில்லியன் டாலர்கள்) மற்றும் பெரிய நிறுவனங்கள் அல்லது திட்டங்களுக்கு அதிக சலுகைகளையும், விரைவான வழியையும் வழங்குகிறது.

விண்ணப்ப காலக்கெடு :
செயலாக்கக் கட்டணம் சமர்ப்பிக்கப்பட்டவுடன், சரிபார்ப்பு மற்றும் ஒப்புதல் செயல்முறைக்கு ஒரு வாரங்கள் ஆகும் என்றும் விண்ணப்பதாரர்கள் விசா நேர்காணலில் கலந்து கொண்டு ஆவணக் கோரிக்கைகளுக்கு விரைவாக பதிலளிக்க வேண்டும் என்றும் கோல்டு கார்டு விசாவை வைத்திருப்பவர்களுக்கு அமெரிக்க நிரந்தர குடியிருப்பாளர்களைப் போலவே வரி விதிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோல்டு கார்டு விசா திட்ட விதிகள் :
- தேசிய பாதுகாப்பு கவலைகள் அல்லது கடுமையான குற்றச் செயல்களுக்காக தங்க அட்டை அந்தஸ்து ரத்து செய்யப்படலாம்.
- சில நாடுகளில் விசா காத்திருப்பு நேரம் ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் இருக்கலாம்.
- அனைத்து விண்ணப்பதாரர்களும் உலகளாவிய வருமானத்திற்கு அமெரிக்க வரிகளுக்கு உட்பட்டவர்கள்.
எப்படி விண்ணப்பிப்பது?
கோல்டு கார்டு விசா திட்ட விண்ணப்பங்களுக்கு https://trumpcard.gov/ என்ற அதிகாரப்பூர்வ வலைதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
