
தவெக ஆலோசனைக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்திடம் கேள்வி கேட்ட பெண்ணை கண்ணாடி அறையில் அடைத்து, அதை வீடியோ எடுக்க விடாமலும் தடுத்ததால் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.
கட்சியின் முதல் மாநில மாநாட்டை முன்னிட்டு மாவட்டந்தோறும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறது தவெக. தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் கும்பகோணத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேடையில் பேசிக்கொண்டிருந்த பொதுச்செயலாளர் ஆனந்திடம், கீழே நின்ற பெண் புஷ்பா, விஜய் மக்கள் இயக்கத்தின் தஞ்சை மாவட்ட தலைவராக இருந்த தனது அண்ணன் தங்கதுரைக்காக வாக்குவாதம் செய்தார்.

தன்னுடைய இடத்தை விற்று, சொத்தை எல்லாம் விற்று விஜய் மக்கள் இயக்கத்தை வளர்த்தார். கட்சி தொடங்கிய பிறகு அவரை ஏன் கட்சி ஒதுக்கி வைத்திருக்கிறது. கட்சி ஆரம்பித்ததும் அவருக்கு பொறுப்புகள் வழங்கவில்லை?’’ என்று கேட்டகவும், அதற்கு பதில் சொல்லாமல் நின்றிருந்தார் ஆனந்த்.
உடனே பவுன்சர்கள் ஓடிவந்து அந்தப்பெண்ணை இழுத்துச்சென்று கண்ணாடி அறையில அடைத்தனர். வீடியோ எடுக்க முயன்ற செய்தியாளர்களையும் தடுத்துவிட்டனர்.

இதனால் கும்பகோணத்தில் நடந்த தவெக கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.