
’’தவெக காரங்க ஸ்கூல் பசங்கள போல அரசியல் செஞ்சுக்கிட்டு இருக்குறாங்க. நடிகர் விஜய் நடிகைகளோட இடுப்பை கிள்ளி அரசியல் செஞ்சுகிட்டு இருக்குறாரு. தவெக தங்களோட லிமிட்டை கிராஸ் செய்யக் கூடாது. நான் களத்துல இருந்து போராடிக்கிட்டு இருக்குறேன். அவர போல வொர்க் ஃபிரம் ஹோம் அரசியல் செய்யல’’ன்னு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆத்திரப்பட்டிருந்தார்.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்று கைதான பாஜகவினர் குறித்து, ‘’இந்த போராட்டம் பாஜகவும் திமுகவும் நடத்தும் நாடகம். இரு கட்சியும் புறவாசல் வழியாக மறைமுகமாக நடத்தும் கூட்டணி’’ என்று தவெக பொ.செ. சொன்னதற்குத்தான் அப்படி ஆத்திரப்பட்டிருந்தார் அண்ணாமலை.

உடனே, ’’தமிழக வெற்றிக் கழகத்தின் நம் வெற்றித் தலைவர், தமிழக மக்களின் அனைத்து இல்லங்களிலும் உள்ளங்களிலும் இருப்பவர்.அவரைத் தரம் தாழ்ந்து விமர்சிக்கும் அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும்,அவர்கள் வருகிற 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தன்னிலையையும் தன்னிடத்தையும் இழப்பது உறுதி’’என்று பதிலடி கொடுத்திருந்தார் தவெக பொருளாளர் வெங்கட்.
இதுபற்றி பாஜக மூத்த தலைவர் எ.ராஜாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, ’’இதுவே நீங்க சொல்லித்தான் அவர் ‘எங்கிட்டு’இருக்குறார்னு தெரியுது. தவெக முதல்ல 234 இடங்கள்லயும் வேட்பாளர்கள நிறுத்தணும். டெபாசிட் வாங்கணும். அதுவே உங்களால முடியாது. சினிமாவுல அத இத எல்லாம் செஞ்சு ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்குறவர வச்சிக்கிட்டு என்னங்கடா வித்த காட்டுறீங்க?’’ என்று விளாசி எடுத்திருந்தார்.

எச்.ராஜாவுக்கு தவெக பொருளாளர் வெங்கட், ‘’அன்புடன் ஓர் அரசியல் விடுகதை! அரசியலில் அங்கிட்டும் இங்கிட்டும் எங்கிட்டும் இல்லாதவர். நோட்டாவுடன் போட்டி போடும் கட்சியைச் சேர்ந்தவர்.எம்.எல்.ஏ.பதவிக்காக கருணாநிதியிடம் கையேந்தியவர்.
தனது ‘அபரிமிதமான’ சொந்த செல்லாக்காசில், தன்னை எதிர்த்துப் போட்டியிடும் எல்லா எதிர்க்கட்சி நபர்களையும் எளிதாக வெற்றி பெறச் செய்பவர். தமிழ்நாட்டிற்கு சிறுநீர் பாசனத்தை அறிமுகப்படுத்தியவர். நீதிமன்றத்தை ‘தரமான(?)’ வார்த்தையால் விமர்சித்து, பிறகு மண்டியிட்டு, மன்னிப்புக் கடிதம் கொடுத்தவர்.

சாரட் வண்டியில் மட்டும்தான் ஏறுவேன் என்று போலீசிடம் வீர அப்பம் சுட்டவர். யார் அந்த அரசியல் சிங்கர்?’’ என்று கேள்வி எழுப்பி, ’’குறிப்பு: காரைக்குடியிலேயே கவிழ்ந்தவர்’’ என்று எச்.ராஜாவுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்திருக்கிறார்.
தவெக பொ.செ. புஸ்ஸி ஆனந்தோ, ‘’அண்ணாமலைக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை’’ என்று இடுப்பு விமர்சனத்திற்கு பதிலளித்துள்ளார்.
பாஜக – தவெக மோதல் ஒரு நாடகம் என்றே பலரும் விமர்சித்து வருகின்றனர்.