
சகட்டுமேனிக்கு பத்திரிகையாளர்கள் முதல் நிர்வாகிகள் வரை பலரையும் தாக்கிவிடுவதால் பவுன்சிலர்கள் மீதான புகார்கள் குவிந்து கொண்டே இருப்பது தலைவலியை தந்ததால் ஆளுநர் ஆர்.என்.ரவியுடனான சந்திப்பில், தனக்கு மத்திய அரசின் பாதுகாப்பு வேண்டும். ஏற்பாடு செய்து தர முடியுமா? என்று கேட்டிருக்கிறார் விஜய்.
ஆளுநரும் விஜய்யின் கோரிக்கையை மத்திய உள்துறையிடம் தெரிவிக்க, உள்துறை பரிசீலனை செய்து, விஜய்க்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அவசியம்தான் என்று உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் அடிப்படையில் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்க முன் வந்துள்ளது.
இதையடுத்து விஜய்க்கு சி.ஆர்பி.எப் வீரர்கள் அடங்கிய ஒய் பிரிவு பாதுகாப்பு கொடுப்பதற்காக மத்திய அரசின் அனுமதியை பெற விஜய்யிடம் சம்மதம் பெற தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். தலைவரிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்று மூன்று வாரங்கள் இழுத்தடித்து வந்திருக்கிறார் புஸ்ஸி.

அனுமதி பெறுவது ஒருபக்கம் இருக்க, சுழற்சி முறையில் மூன்று ஷிப்டுகளில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்பு அளிக்க வேண்டி இருப்பதால் விஜய் வீட்டில் அவர்கள் தங்குவதற்கான வசதிகளையும் பார்வையிட வேண்டியதிருந்தது.
புஸ்ஸியிடம் இருந்து எந்த பதிலும் வராததால் பொறுமையிழந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள், 24 மணி நேரம் கெடு கொடுத்திருக்கிறார்கள் புஸ்ஸிக்கு. அதுமட்டுமல்ல, நீங்களாகவே பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டுவிட்டு, இப்போது ஏன் பம்முகிறீர்கள்? என்று டோஸ் விட்டிருக்கிறார்கள்.
இதன்பின்னரே விஜய்யை சந்திக்க ஏற்பாடு செய்திருக்கிறார் புஸ்ஸி. விஜய்யை சந்தித்த அதிகாரிகள் விசயத்தைச் சொல்லி ஆத்திரப்பட்டபோது, ‘’ரொம்பா ஷாரி. என்கிட்ட விசயத்தை சொல்லவே இல்லை’’ என்று சொல்லி இருக்கிறார்.
அதற்கு, அதிகாரிகள் எங்களாலேயே உங்களை தொடர்புகொள்ள முடியவில்லையே. அதிகாரம் வந்தால் மக்கள் எப்படி உங்களை தொடர்புகொள்ள முடியுமோ? என்று ஆதங்கத்தைச் சொல்லவும் ஆடிப்போயிருக்கிறார் விஜய்.
ஒருவழியாக பாதுகாப்பு வேண்டும் என்று கையெழுத்து போட்டு அனுப்பிவிட்டு, இந்த விசயத்தை தன்னிடம் சரியான நேரத்தில் சொல்லி சரியாக கையாளத்தெரியலையே என்று புஸ்ஸியை போட்டு வறுத்தெடுத்திருக்கிறார் விஜய்.