
அடுத்த 10ஆவது நாளில் அதாவது மார்ச் 28ஆம் தேதி அன்று தவெக பொதுக்குழு நடைபெற உள்ளது. கோஷ்டி மோதல், வசூல் ராஜாக்களாக இருக்கும் மா.செ.க்கள் குறித்த புகார்கள் எல்லாம் விஜயின் கவனத்திற்கு செல்லாதபடி புஸ்ஸி ஆனந்தும், ஜான் ஆரோக்கியசாமியும் தடுப்பணையாக உள்ளதால் இந்த பொதுக்குழுவில் நேருக்கு நேராக விஜய்டம் வெடிக்க காத்திருக்கின்றனர் தவெகவினர்.
தவெகவில் மா.செ.க்கள் நியமனத்திற்கு பண பேரம் நடக்குது என்று தொடர்ந்து செய்திகள் வந்தன. இப்போது அந்த மா.செக்கள் வசூல் ராஜாக்களாக மாறி வதைக்கிறார்கள் என்கின்றனர் விழுப்புரம் மாவட்ட தவெகவினர்.
மார்ச். 8ம் தேதி அன்று தவெக சார்பில் விழுப்புரத்தில் மகளிர் தினம் கொண்டாடப் பட்டிருக்கிறது. இதில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதற்காக கட்சி நிர்வாகிகள் பலரையும் போட்டு வறுத்தெடுத்துள்ளாராம் விழுப்புரம் மா.செ. குஷி மோகன்.

விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் இருக்கும் 4 ஒன்றியங்களில் உள்ள 300 கிளைச்செயலாளர்கள் மற்றும் 42 நகர வார்டு செயலாளர்களிடமும் தலா 5 ஆயிரம் ரூபாய் வசூல் செய்திருக்கிறாராம் குஷி மோகன்.
அது மட்டுமல்லாமல், ஸ்டேஜ் வேலை, தையல் மெசின் என்று விழா நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அனைத்திலும் ஒவ்வொருவரையும் கட்டாயப்படுத்தி பங்கேற்க வைத்துள்ளாராம். நிர்வாகிகளிடம் வசூலித்த தொகையை அப்படியே ஆட்டைய போட்டுவிட்டாராம். இதனால் ஆத்திரத்தில் இருக்கும் நிர்வாகிகள் பொதுக்குழுவில் பிரச்சனையை எழுப்பப் போவதாக சொல்லி வருகிறார்கள் என்கிறார் தவெக கில்லி சுகர்னா.
rtqxcS sFOx Rif HWhb YOhcuNgd kpEWZRd
othd31
kr0uhg