பாமக தலைவர் நாற்காலி போட்டியில் அதிகாரப்பூர்வ பாமக எது? என்ற வழக்கு நடந்து வரும் நிலையில் அன்புமணியால் தூக்கம் வரவில்லை. மன உளைச்சலில் இருக்கிறேன் என்று ராமதாஸ் முன்பு சொல்லி இருந்தார். இப்போது தூக்கம் வரவில்லை. மன உளைச்சலில் இருக்கிறேன் என்கிறார் அன்புமணி.
’’இதுவும் கடந்து போகும் என்று நானும் எவ்வளவோ அவமானங்களை சந்தித்து வருகிறேன். எவ்வளவோ அசிங்கப்பட்டிருக்கிறேன். மன உளைச்சல்.. தூக்கம் இல்லாத நாட்கள். எதற்கு? இதை எல்லாம் எதற்கு பொறுத்துக்கொண்டிருக்கிறேன். இந்த கட்சிக்காகத்தான் இந்த சமுதாயத்திற்காகத்தான்.

சூழ்ச்சியால் அப்பா – மகன் உறவை கெடுத்துவிட்டார்கள். அய்யாவை சுற்றி இருக்கும் துரோகிகள் அவரை என்ன மாதிரியான மனநிலைக்கு கொண்டு வந்துவிட்டார்கள் பார்த்தீர்களா? இந்த துரோகிகளை ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை. நானும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். என்ன நடக்குமோ நடக்கும். பொய் பொய்யா சொல்லுறானுங்க.
இன்னும் மூணு மாசத்துல எவெனவன் ஜெயிலுக்கு போகப்போறான்னு பார்க்கத்தானே போறீங்க. சும்மா விடப்போறதில்ல. பாமக விவகாரத்தில் சிவில் கோர்ட்டுக்கு போங்க என்று தீர்ப்பு வந்திருக்கிறது. உடனே வெற்றி வெற்றி என்கிறார்கள். ஒரு சாக்கடைஇருக்கிறது. சாக்கடை என்ன செய்யும். அதைத்தான் செய்கிறது. ’’ என்று பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் குமுறியிருக்கிறார் அன்புமணி ராமதாஸ்.
அதே நேரம், அய்யாவுக்கு ஒரு சட்ட ஆலோசகர் இருக்கிறார். அவர் பாண்டிச்சேரிக்காரர். அவரை எல்லாம் கழிச்சுக் கட்டிடுவோம். அரசியல் களம் நமக்காகவே அமைந்திருக்கிறது. அரசியல் களத்தை நாம் நிரப்ப வேண்டும். சின்னம் நம்மிடம்தான் இருக்கும் என்று தொண்டர்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறார்.
