கடந்த 2020 பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் இந்தியா வந்த போது, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் உமர் காலித் கலந்து கொண்டருந்தார்.
போராட்டத்தில் கலந்துக் கொண்டுப் பேசிய அவரின் பேச்சு கலவரத்தை தூண்டும் வகையில் இருந்ததாகக் கூறி டெல்லி காவல்துறை தேச துரோக வழக்குப் பதிந்தது.
அதைத் தொடர்ந்து, 2020 செப்டம்பர் மாதம் உமர் காலித்தை அவரின் வீட்டில் வைத்து டெல்லி போலீசார் கைது செய்தனர்.
உமர் காலித்தூக்கு ஜாமீன் வழங்கக் கோரி, கடந்த 2022 மார்ச் மாதம் பதிவு செய்யப்பட்ட வழக்கை Karkardooma கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பிறகு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், கடந்த 2022 அக்டோபர் மாதம் ஜாமீன் வழங்க மறுத்து உத்தரவிட்டது.
அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குப் பதிந்த உமர் காலித், பல மாதங்களாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், இன்று வசாரணைக்கு வந்த ஜாமீன் வழக்கை வரும் ஜனவரி 30-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.