அமெரிக்க வெளியுறவுத்துறை சமீபத்தில் தைவானுக்கு சுமார் $11.15 பில்லியன் (சுமார் ₹1 லட்சம் கோடி) மதிப்புள்ள ஆயுத விற்பனைக்கு ஒப்புதல் அளித்தது.

சீனாவிற்கும் தைவானிற்கும் என்ன பிரச்சனை?
கிழக்காசியாவில் தென் சீன கடல், கிழக்கு சீன கடல், பிலிப்பைன்ஸ் கடல் ஆகியவற்றுக்கு மத்தியில் இருக்கும் தீவு தான் தைவான் (Taiwan). இந்நிலையில், பல ஆண்டுகளாக சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. தைவான் தனி நாடு அல்ல, அது சீனாவின் ஒரு பகுதி என்று தொடர்ந்து சீனா சொல்லி வருகிறது. அதேநேரம், எங்களுக்கென்று தனி இறையாண்மை உள்ளது என்றும் நாங்கள் தனி நாடு தான் என்று கூறி வருகிறது தைவான்.
பிரச்சனைக்கான முக்கிய காரணங்கள்:
- சீனாவின் நிலைப்பாடு: சீனக் குடியரசு (PRC), தைவானை தனது நாட்டுடன் பிரிக்க முடியாத பகுதி என்று கருதுகிறது. மேலும் தேவைப்பட்டால் இராணுவ பலத்தைப் பயன்படுத்தி அதை இணைக்கத் தயாராக உள்ளது.
- தைவானின் நிலைப்பாடு: தைவான் ஒரு தனி, ஜனநாயக நாடு. அதன் மக்கள் தங்களை சீனர்களாகக் கருதுவதில்லை. மேலும் சீனாவின் ஆதிக்கத்தை நிராகரிக்கிறார்கள்.
- தைவானின் ஜனநாயக அமைப்பு: தைவான் ஒரு சுதந்திரமான, ஜனநாயக நாடு. சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்யும் தைவானின் வாழ்க்கை முறை, தைவானின் மக்கள் ஜனநாயகத்துடன் வாழும் முறையிலிருந்து வேறுபடுகிறது, இது சீனாவுக்குப் பிடிக்காத விஷயம்.
- ராணுவப் பதற்றம்: சீனா, தைவானைச் சுற்றி தொடர்ந்து ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்கிறது, விமானங்களை அனுப்புகிறது, இது தைவானில் பதற்றத்தை அதிகரிக்கிறது.
தைவானின் பாதுகாப்பு அமைச்சகம், சீன (China) இராணுவ விமானங்கள் மற்றும் கப்பல்கள் அதன் எல்லைக்கு அருகில் ஊடுருவுவதைத் தொடர்ந்து அறிக்கை செய்கிறது. இது குறிப்பிடத்தக்க புவிசார் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் சீனா தைவானை உரிமை கொண்டாடுகிறது மற்றும் இராணுவ அழுத்தத்தை அதிகரிக்கிறது, அதே நேரத்தில் தைவான் தனது இறையாண்மையை உறுதிப்படுத்துகிறது. இது தைவான் ஜலசந்தியில் பிராந்திய ஸ்திரத்தன்மை குறித்த அடிக்கடி மோதல்கள் மற்றும் கவலைகளுக்கு வழிவகுக்கிறது .

தைவானுக்கு ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா :
அமெரிக்க வெளியுறவுத்துறை சமீபத்தில் தைவானுக்கு சுமார் $11.15 பில்லியன் (சுமார் ₹1 லட்சம் கோடி) மதிப்புள்ள ஆயுத விற்பனைக்கு ஒப்புதல் அளித்தது. இது இதுவரை அறிவிக்கப்பட்ட மிகப்பெரிய ஆயுதத் தொகுப்பாகும்.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,தைவானுக்கு நடுத்தர தொலைவு ஏவுகணைகள், ஹோவிட்சர் பீரங்கிகள், ட்ரோன்கள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களை விற்பனை செய்வதற்காக 8 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவற்றின் மொத்த மதிப்பு 1,115 கோடி டாலர் ஆகும் என்றும் தெரிவித்தது.
மேலும், இந்த ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படவிருக்கும் எளிதில் இடம் மாற்றக்கூடிய 82 எறிகணை பீரங்கிகள், 420 அட்டாக்கம்ஸ் ஏவுகணைகள் ஆகியவை 400 டாலருக்கு மேல் மதிப்புடையவை ஆகும்.இது தவிர ராணுவ மென்பொருள், ஜாவலின் மற்றும் டிஓடபிள்யு ஏவுகணைகள், ஹெலிகாப்டர் உதிரிபாகங்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த ஒப்பந்தங்களுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தால், தைவானுக்கான அமெரிக்காவின் மிகப் பெரிய ஆயுத விற்பனையாக இது இருக்கும்.
இதனையடுத்து, ஜனாதிபதி லாய் சிங்-டே மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் உட்பட தைவான் அரசாங்கம், இந்த ஒப்பந்தத்திற்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும், இது சீனாவிற்கு எதிராக “வலுவான தடுப்பு திறன்களை” உருவாக்க உதவும் என்று கூறியது.
மேலும், இந்த நடவடிக்கையை பெய்ஜிங் கடுமையாகக் கண்டித்தது. இது “ஒரே சீனா கொள்கையை முற்றிலும் மீறுவதாக” கூறியதுடன், இதுபோன்ற ஒப்பந்தங்களை நிறுத்தக் கோரியது.தொடர்ந்து, “தைவான் சுதந்திரத்திற்கு” உதவுவதன் மூலம் அமெரிக்க தரப்பு “தன்னைத்தானே தீக்குளிக்கும்” என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எச்சரித்தார்.
