உத்தரப் பிரதேசத்தில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 23 வயது இளைஞர் காவல்துறையின் அலட்சியத்தால் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியான கோரக்பூரில் அரங்கேறிய இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் துன்புறுத்தல்களை குற்றமாக கருதும் IPC 377-வது பிரிவு வருகிற ஜூலை மாதம் முதல் ரத்தாக உள்ளது என்பதை கடும் விவாதத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 23 வயது இளைஞன் புகார் கொடுக்க வந்த போது போலீஸார் அவரை ஒரு காவல் நிலையத்திலிருந்து மற்றொரு காவல் நிலையத்திற்கு அலைக்கழிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மனிதாபிமானம் இழந்து அந்த இளைஞரை அவமானப்படுத்தி, பல முறை முறையிட்டும் FIR பதிவு செய்ய போலீசார் தாமதப்படுத்தியதால், இறுதியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கோரக்பூரில் தனது சகோதரனுடன் வசித்து வந்த பவன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது), போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன்பு, இன்ஸ்டாகிராமில் கரண் தாக்கூர்(26) என்பவருடன் நட்பு ஏற்பட்ட நிலையில், மிஸ்ராவைச் சந்திக்க ஒருநாள் பவன் நேரில் சென்றுள்ளார்.
பவனை ஒரு ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்ற மிஸ்ரா, தனது நண்பர்களான தேவேஷ் சர்மா (24), அங்கத் குமார் (21) மற்றும் மோகன் பிரஜாபதி (20) ஆகியோருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தி உள்ளார்.
அதோடு அதை வீடியோவாக பதிவு செய்த அந்த கும்பல், பணம் தராவிட்டால் வீடியோவை வெளியிடுவேன் என்று பவனை மிரட்டியுள்ளனர்.
பணத்தை கொண்டு வருமாறு தங்கையை அழைத்த பவன், நீண்ட போராட்டத்திற்கு பிறகு அந்த கும்பலிடம் இருந்து தப்பியுள்ளார்.
ஷாஹ்பூர் காவல் நிலையத்திற்குச் சென்ற பவன், ஷாஹ்பூர் போலீசார் அவரை சிலுவால் காவல் நிலையத்திற்கு செல்லும்படி கூறியுள்ளனர்; சிலுவாடல் போலீசார் FIR பதிவு செய்யவில்லை.
இரவு 11 மணி வரை காத்திருந்த பவனை, காவல்துறையினர் மறுநாள் வரச் சொல்லி உள்ளனர். மறுநாள் சென்று மூத்த அதிகாரிகளிடம் பவன் முறையிட்டதை அடுத்து, FIR பதிவு செய்யப்பட்டது
ஒவ்வொரு காவல் நிலையத்திலும், போலீசார் பவனை அவமானப்படுத்தியதாகவும், விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தகாத கேள்விகளைக் கேட்டதாக பவனின் சகோதரர் குற்றம் சாட்டியுள்ளார்
பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியும் காவல்துறையின் மனிதாபிமானமற்ற நடத்தையாலும் வேதனை அடைந்த பவன் கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது
பவன் உயிரிழந்த 6 மணி நேரத்திற்குள், 3 குற்றவாளிகளை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
பவனை மனரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் துன்புறுத்தியதற்காகவும், தற்கொலைக்குத் தூண்டியதற்காகவும் காவல்துறை மீது உ.பி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
மிஸ்ரா, ஷர்மா, குமார் மற்றும் பிரஜாபதிக்கு எதிராக IPC பிரிவு 377 (கற்பழிப்பு) மற்றும் மிரட்டி பணம் பறித்தல், மிரட்டல் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது
இந்த 4 குற்றவாளிகள் மீது ஆண்களுக்கு எதிரான கற்பழிப்பைக் குற்றமாக்கும் ஒரே சட்டம் IPC பிரிவு 377-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது
இந்த சூழலில், ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நியாய சம்ஹிதாவில் 377 பிரிவை தக்கவைக்க மத்திய அரசு தவறியுள்ளது
பாரதிய நியாய சம்ஹிதாவில் 377 பிரிவை தக்கவைக்க வேண்டும் என்ற நாடாளுமன்றக் குழுவின் ஆலோசனையை மத்திய உள்துறை அமைச்சகம் புறக்கணித்தது என்பது சமூகவியலாளர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது