
வந்தாரா(vantara) – இது ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் ஆனந்த் அம்பானியின் கனவுத்திட்டம்
இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் காயமடைந்த, ஆபத்தான சூழலில் உள்ள விலங்குகளை மீட்டு சிகிச்சையளித்து மறுவாழ்வு அளிப்பது இத்திட்டத்தின் நோக்கம்
இதற்காக குஜராத்தில் 3500 ஏக்கரில் அமைந்துள்ள மையத்தை 4.3.2025ல் பிரதமர் மோடி திறந்து வைத்தார்
ஆனால், 2008ம் ஆண்டில் இருந்தே இந்த மையம் செயல்பட்டு வருகிறது

200க்கும் மேற்பட்ட யானைகளும், இந்தியா முழுவதிலும் இருந்து மீட்கப்பட்ட 200 சிறுத்தைகள்
தமிழ்நாட்டில் இருந்து மீட்கப்பட்ட 1000 முதலைகளும் இம்மையத்தில் உள்ளன
ஆப்பிரிக்கா, மெக்ஸிகோ, ஸ்லோவாக்கியா நாடுகளிலிருந்து மீட்கப்பட்ட விலங்குகள் இம்மையத்தில் உள்ளன
2022ம் ஆண்டில் இருந்து 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து CITES ன் கீழ் சர்வதேச வர்த்தகத் தடைக்கு உட்பட்ட இனங்களைச் சேர்ந்த 39,000 காட்டு விலங்குகளை ’வந்தாரா’ மீட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்புடன் சர்வதேச வர்த்தகத் தடையை மீறியுள்ளது வந்தாரா நிறுவனம் என்று Suddeutsche Zeitung எனும் ஜெர்மன் பத்திரிகையும், Armando Info எனும் வெனிசுலா ஊடகமும் இணைந்து ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது
இதற்காக ஆனந்த் அம்பானியின் vantara நிறுவனம் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்றும் கூறியிருக்கிறது அந்த ஆய்வறிக்கை

இது போன்று சட்ட விதிமுறைகளை மீறியதாக வந்தாரா மீது அடுக்கட்டுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தன
இதை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்
விசாரணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்த உச்சநீதிமன்றம், ’’வந்தாரா மையம் விலங்குகளை வாங்குவது ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டே நடந்துள்ளது’’ என்று கூறியிருக்கிறது.
இது பற்றி தேவையற்ற குற்றச்சாட்டுகளை எழுப்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தி இருக்கிறது