
நாம் தமிழர் கட்சிக்கும் திருச்சி எஸ்.பி. வருண்குமாருக்கும் இடையேயான மோதல் போக்கு கொஞ்ச காலம் ஓய்ந்திருந்தது. தற்போது மீண்டும் தொடங்கியிருக்கிறது.
’’நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு பிரிவினைவாத இயக்கம். நானுஒம் என்னுடைய குடும்பத்தினரும் இணையதள குற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இணைய குற்றம் செய்யும் கூலிகளை கண்காணிக்க 14C என்ற அமைப்பை உருவாக்க வேண்டும்’’ என்று ஐந்தாவது தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் பேசி இருந்தார் திருச்சி எஸ்.பி. வருண்குமார் ஐபிஎஸ்.

நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவனை வாதம் என்ற வருண்குமாரின் குற்றச்சாட்டு கண்டு நாம் தமிழர் கட்சியினர் கொதித்தெழுந்துள்ளனர்.
‘’துணிவு, திராணி ஏதும் இருந்தா உங்க பதவியை ராஜினாமா பண்ணிட்டு நேரடியா அரசியலுக்கு வாங்க மோதுவோம் ‘’ என்று ஆவேசமாகிறார் நாதக நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி.

’’என் கட்சியை குறை சொல்வதற்காகத்தான் ஐபிஎஸ் ஆகியிருக்கிறாரா வருண்குமார்? ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாருடன் மோத தயார். மோதுவோம் வா’’ என்று ஆவேசப்பட்டிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
.