பாதிரியார் ஒருவர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் காவாலா பாடலுக்கு மேடையில் குத்தாட்டம் போடுவது போன்ற வீடியோ ஒன்று வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையில் அசோக்நகர் பள்ளியில் மாணவிகளிடையே ஆன்மீக சொற்பொழி வாற்றிய மகாவிஷ்ணுவின் சர்ச்சை பேச்சினால் அவர் கைதாகி இருக்கும் நிலையில், ’’பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு தான் குடுக்க கூடாது. மற்றபடி இப்படி காவாலா காவாலான்னும் கூத்தடிக்கலாம் இல்லையா திராவிட மாடல் அமைச்சரே?’’ என்று வலைத்தளங்களில் கேட்டு வருகின்றனர்.
உண்மையில் நடந்தது என்ன? இந்த வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது அல்ல. இது கேரளாவில் எடுக்கப்பட்டது. இந்த வீடியோவும் கேரளாவைச் சேர்ந்த சமூக வலைத்தள பக்கங்களில் பதிவாகி இருக்கிறது. அந்த பாதிரியாருக்கு பின்னால் இருக்கும் பதாகையிலும் மலையாள எழுத்துக்கள் இருப்பதே இது தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதற்கு அழுத்தமான ஆதாரம் ஆகும் என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.