இனிமேலாவது இந்த அக்கப்போர் ஓயும் என்று பார்த்தால் இப்பத்தான் உச்சத்திற்குப் போகுது.
சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு விஜய் அரசியல் பக்கம் போய்விட்டதால், அஜித்தும் சினிமாவை குறைத்துக்கொண்டு மீண்டும் கார் பந்தயத்தில் தீவிரமாக களமிறங்கி விட்டார். இதனால் விஜய் – அஜித் ரசிகர்கள் மோதலுக்கும் முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது என்று பலரும் சொல்லி வந்தனர். ஆனால் இப்போதுதான் ஆரம்பம் என்பது மாதிரியே படு சூடாக மோதிக் கொண்டிருக்கிறார்கள் இரு தரப்பினரும்.
தங்களின் படங்கள் மூலம் ’பஞ்ச்’ பேசி விஜய்யும் அஜித்தும் மோதிக்கொண்ட காலம் எல்லாம் மலையேறிப்போய் விட்டது. ரசிர்களின் மோதல் போக்கு மட்டும் தொடர்ந்தது. சில வருடங்களாக இவ்விரு ரசிகர்களுக்கும் இடையேயான மோதல் போக்கில் கொஞ்சம் மாறுதல் இருந்தது. தீவிரம் குறைந்திருந்தது.
அஜித் – விஜய் ரசிகர்கள் மோதல் என்ற நிலை மாறி, ரஜினி – அஜித் ரசிகர்கள் மோதல் என்ற நிலை வந்தது.
ரஜினி காலமாகிவிட்டார் என்று சொல்லி அவருக்கு ஈம காரியங்கள் செய்வது மாதிரி வலைத்தளங்களில் பரப்பி வந்தனர் விஜய் ரசிகர்கள். அதே மாதிரி விஜய் காலமாகிவிட்டார் என்று சொல்லி அவருக்கு ஈம காரியங்கள் செய்வது மாதிரி வலைத்தளங்களில் பரப்பி வந்தனர் ரஜினி ரசிகர்கள்.
இது அப்படியே மாறி விஜய் காலமாகிவிட்டார் என்று பரப்பி வருகின்றனர் அஜித் ரசிகர்கள். பதிலுக்கு விஜய் ரசிகர்களும் அப்படியே செய்து வருகின்றனர்.
அதிலும் முகம் சுளிக்கும் வகையில் வலைத்தளங்களில் வன்மத்தை கக்கி வருகின்றனர் இரு தரப்பினரும்.
எங்கே செல்லும் இந்தப்பாதை…?