தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர்களை சிலரை மட்டுமே நியமித்துள்ளார் நடிகர் விஜய் அவர்கள் ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கத்தில் மாவட்ட தலைவர்களாக இருந்தவர்கள்.
தேர்வு செய்யப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை புஸ்ஸிஆனந்த் மற்றும் பொருளாளர் வெங்கட்ராமன் அவர்களை தவிர்த்து விஜய் சந்தித்தார் என்பது ஜான் ஆரோக்கியசாமியின் திட்டமிட்ட அரசியல் நாடகம்.
விஜயை புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஜான் ஆரோக்கிய சாமியை தாண்டி எவரும் பார்க்க முடியாது என்பது நிர்வாகிகள் அனைவரும் அறிந்த ஒன்றே. இருந்தபோதிலும் இருவரையும் மீறி விஜய்யை பார்க்க முடியும் என்ற நாடகத்தை புஸ்ஸி ஆனந்தும் & ஜான் ஆரோக்கியசாமி நடத்தியுள்ளனர்.
இந்த நிர்வாகிகள் சந்திப்பின்போது விஜய் கட்சி குறித்தோ அரசியல் நிலவரங்கள் குறித்தோ எதுவும் பேசவில்லை என நம்மிடம் பேசிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூறினர்.
இந்த நிர்வாகிகள் சந்திப்பின்போது 2.00 மணிக்கு மேல் ஜான் ஆரோக்கியசாமி மாவட்ட செயலாளர்களிடம் பயிற்சி அளிப்பதாக கூறி 45 நிமிடம் பேசி உள்ளார்.
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பெரிய அளவில் பொருளாதார பலமும் உள்ளூர் சமூக செல்வாக்கும் அரசியல் பலமோ இல்லாதவர்கள் என்ற கருத்து தமிழக வெற்றிக்கழக கட்சியினர் இடத்திலும் அரசியல் வட்டாரத்திலும் நிலவி வருகிறது.
இவர்களை வைத்துக்கொண்டு விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திப்பது என்பது சிக்கலான ஒன்று. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 19 மாவட்ட செயலாளர்களை குறித்த தகவல் அறிந்த அந்தப் பகுதிகளை சார்ந்த மாற்றுக் கட்சியினர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளதாக தகவல்.
2be7v0