இன்றைக்கும் கூட ‘அதிமுக ஒன்றியணைய வேண்டியது அவசியம்; அதிமுக ஒன்றிணையும்’ என்று திட்டவட்டமாகச் சொல்கிறார் சசிகலா. ஓபிஎஸ் தரப்பினரும் கூட இதையே சொல்லி வருகிறார்கள். இபிஎஸ் தரப்பினரும் கூட இதையே சொல்லி வருவதாக தகவல் பரவுகிறது. ஆனால், இபிஎஸ் மட்டும் இதில் ரொம்பவே பிடிவாதமாக உள்ளார். ‘இணைப்பு’ என்பது இல்லவே இல்லை என்ற மன நிலையில் உள்ளார். அவர் வாயில் இருந்து இதுவரையிலும் இணைப்பு என்ற வார்த்தையே வரவில்லை. அதனால்தான், ‘’2026 தேர்தலுக்கு இபிஎஸ் ஆட்டம் ஓய்ந்துவிடும்’’ என்று செமத்தியாக அர்ச்சணை செய்து வருகிறார் டிடிவி.
இணைப்பு இல்லை என்றால் கூட்டணியாவது பலமாக இருக்க வேண்டும் என்று கட்சியினர் கடுப்பில் இருக்க, கூட்டணி விசயத்தை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அண்மையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறாராம் இபிஎஸ். அதோடு, சீமான், பாஜக பற்றி விமர்சிக்க வேண்டாம் என்றும் உத்தரவிட்டிருக்கிறாராம் இபிஎஸ்.
இதற்கு முன்பு நடந்த நிர்வாகிகள் கூட்டத்திலும், யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரம்மாண்ட கூட்டணியை அமைத்து தருகிறேன் என்று நிர்வாகிகளிடம் உறுதி கூறிய இபிஎஸ், திருமா, கம்யூனிஸ்டுகள், அண்ணாமலை, சீமான், விஜய் ஆகியோரை பற்றி விமர்சிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டதாக செய்திகள் கசிந்தன. 2026 தேர்தலில் திருமா, சீமான், விஜய் ஆகியோருடன் அதிமுக கூட்டணி அமைக்கப்போகிறது என்று இதனால்தான் செய்திகள் பரவின.
இப்போது சீமான், பாஜகவை விமர்சிக்க வேண்டாமென்று உத்தரவிட்டிருப்பதால் அனேகமாக 2026 தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி என்பது உறுதியாகிறது.
அன்று விஜய்யை விமர்சிக்க வேண்டாமென்று அழுத்தமாகச் சொன்ன இபிஎஸ் இன்று சீமானை விமர்சிக்க வேண்டாம் என்று அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார் என்றால், கூட்டணி கணக்கில் அப்படிச் சொன்னாரா என்று தெரியவில்லை? ஏன் என்றால், ‘’கூட்டணி வைப்பது தற்கொலைக்குச்சமம்’’ என்று இப்போதும் சொல்லி வருகிறார் சீமான்.
பெரியார் விவகாரம் உள்பட பல விசயங்களில், சீமான் மாறி மாறி பேசி வருகிறார் என்ற விமர்சனம் இருப்பதால், ’’கூட்டணி வைப்பது தற்கொலைக்குச்சமம்’’ என்று அவர் சொன்னதைக் கூட கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லைதான்.
3iqq1d