அண்ணாமலை அடிக்கடி சொல்லி வருவது போலவே 2026ல் எந்த தனிக்கட்சியுடைய ஆட்சியும் கோட்டையில் இருக்காது என்கிறார் தமிழருவி மணியன்.
இது ஒரு பக்கம் இருக்க, 8 சதவிகித வாக்குகளை பெற்றிருக்கும் சீமான், அடுத்தும் தனித்து போட்டியிட்டு வாக்கு சதவிகிதத்தை உயர்த்த நினைப்பதை விட, கூட்டணி அமைத்து தன் கட்சிக்கு எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் பெறுவதுதான் புத்திசாலித்தனம் என்ற விமர்சனங்கள் எழுந்திருக்கும் நிலையில், அவரும் தவெக விஜய்யுடன் கூட்டணி அமைக்க விரும்புகிறார்.
இதுகுறித்து அடிக்கடி பொதுவெளியில் சீமான் கருத்து தெரிவித்து வந்த நிலையில்தான் விஜய் அவரை சந்தித்து பேசியிருக்கிறார்.
அரசியலில் அடியெடுத்து வைக்கப்போகும் முன்பே பல அரசியல் பிரமுகர்கள், பத்திரிகையாளர்களுடன் பேசி ஆலோசனை செய்து வந்தார் ரஜினிகாந்த். அதுபோலவே அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பிலிருந்தே பல அரசியல் பிரமுகர்கள், பத்திரிகையாளர்களுடன் பேசி ஆலோசித்து வருகிறார் விஜய். பெரும்பாலும் அவர் காரில் பயணித்துக்கொண்டேதான் இந்த ஆலோசனை செய்து வருகிறாராம்.
அந்த வகையில் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றோடும், வடமாவட்டங்களில் செல்வாக்கு மிகுந்த அரசியல் கட்சி தலைவர் ஒருவருடனும் விஜய்க்கு நல்ல நட்பு இருந்து வருகிறது என்கிறது தவெக வட்டாரம்.
‘’என் தம்பி விஜய்யுடன் இணைந்து பயணிக்கத் தயார்’’ என்று அடிக்கடி சீமான் சொல்லி வந்த நிலையில், தனது காரில் சீமானை அவரது வீட்டிற்கே சென்று அழைத்துக் கொண்டு, பழைய மகாபலிபுரம் சாலையில் இரண்டு மணி நேரம் காரில் பயணித்துக்கொண்டே அரசியல் குறித்து நிறைய ஆலோசித்திருக்கிறார்.
இதையடுத்து, சீமானுடன் கூட்டணி அமைக்க விஜய் ஒப்புக்கொண்டதாகவும், கூட்டணியில் தேசிய கட்சி ஒன்று இருந்தால் நல்லது என்று விஜய் சொன்னதாகவும் செய்திகள் பரவின. அந்த தேசிய கட்சி காங்கிரசாக இருந்தால் நல்லது விஜய் நினைப்பதாகவும், இதற்கு சீமான் சம்மதிப்பாரா? என்ற சந்தேகத்தால் விஜய் அந்த தேசிய அட்சி குறித்து சீமானிடம் எதுவும் பேசவில்லை என்றும் தகவல் பரவின. தேசிய கட்சி என்பதால் பாஜகவுடன் கூட்டணி அமைக்க சீமான் சம்மதிப்பார், ஆனால் ரெய்டு டார்ச்சர் கொடுத்த பாஜகவுடன் விஜய் கைர்ப்பாரா? என்ற கேள்வியும் எழுந்தன. கம்யூனிஸ்டுடன் நல்ல நட்பு இருப்பதால் அந்த தேசிய கட்சி கம்யூனிஸ்ட்டாகவும் இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்ற பேச்சு இருந்தது.
விஜய்யும் நாதக, விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க விரும்புவதாகவும் செய்திகள் வருகின்றன.
8 சதவிகித வாக்குகளை வைத்திருக்கும் சீமான், விஜய்யுடன் கூட்டணி சேர்ந்தால் 16 முதல் 20 சதவிகித வாக்குகள் கிடைக்கும். ஆனால், கோட்டைக்கு போக முடியாது என்கிறார் தமிழருவி மணியன்.
ஆனால், தற்போது தனித்து போட்டியிட விஜய் முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன. அந்த கார் பயணத்தில் சீமானுடன் விஜய் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. முதலில் தனித்து நின்று தவெகவின் பலம் என்ன என்பத உறுதி செய்துகொள்கிறேன். அதன் பின்னர் கூட்டணி பற்றி பேசலாம் என்று சொல்லி இருப்பதாக தகவல் பரவுது.