கட்சி தொடங்க வேண்டும் என்று விஜய் முடிவெடுத்ததில் இருந்தே விஜய்க்கு எல்லாமுமாக இருந்து வருகிறது அந்த துபாய் நிறுவனம். அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருக்கும் விஜய்யை அந்நிறுவனம் இயக்குகிறது என்று சொன்னால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.
தவெக தொடங்கி கட்சி சார்பில் நடைபெறும் நிகழ்வுகள், மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா போன்றவற்றை எப்படி நடத்துவது என்று திட்டமிடுவதில் இருந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் வரையிலும் அனைத்து பொறுப்புகளையும் இந்த துபாய் நிறுவனம்தான் கவனித்துக்கொள்கிறது.
விஜய்யின் பாதுகாப்புக்கு வரும் பாதுகாவலர்கள் கூட துபாயில் இருந்துதான் வருகிறார்களாம்.
விக்கிரவாண்டியில் நடைபெறும் தவெக முதல் மாநில மாநாட்டிற்கான அனைத்து வேலைகளையும் இந்த துபாய் நிறுவனம்தான் கவனித்து வருகிறது.
300 மருத்துவர்களை இந்த மாநாட்டில் பணியமர்த்த ஏற்பாடுகளை செய்துவருகிறது இந்த நிறுவனம். மாநாடு நடைபெறும் இடத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்ணீர் டேங்க் வைக்கவும் ஏற்பாடு செய்து வரும் இந்நிறுவனம், மாநாட்டில் ஒருங்கிணைப்பு, உணவு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விசயங்களை கவனித்துக்கொள்கிறது.
அப்படி இருந்தும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களையும் மாநாடு ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளார் விஜய்.