சேலத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் , தனது பரப்புரைக் கூட்டத்தை டிசம்பர் 4-ம் தேதி சேலத்தில் நடத்தக் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்ட நிலையில், அத்தேதிக்கு அனுமதி மறுத்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
டிசம்பர் 4-ம் தேதி கார்த்திகை தீபம் என்பதால் காவல்துறைக்கு பணிகள் அதிகமாக உள்ளது எனவும், அந்நாளில் பாதுகாப்பு கொடுக்க இயலாது எனவும் கூறியுள்ளனர்.
மேலும், டிச.3-ம் தேதி கார்த்திகை தீபம், டிச.6-ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் வருவதால், டிச.4ம் தேதி தவிர மற்ற தேதிகளில் அனுமதி அளிக்க தயாராக உள்ளோம். மனுவில் மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கை குறிப்பிடப்படாமல் உள்ளதாகவும், அதை குறிப்பிட்டால் தான் அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள முடியும் என காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பிரச்சாரம் மேற்கொள்ள போஸ் மைதானம், கோட்டை மைதானம், சீலநாயக்கன்பட்டி ஆகிய இடங்களை குறிப்பிட்டு தவெக அனுமதி கேட்ட நிலையில், இடம் பற்றிய தகவல்கள் அல்லது ஆலோசனைகள் பற்றி காவல்துறை எங்கும் குறிப்பிடவில்லை.
