தமிழக வெற்றிக்கழகம் கட்சியை தொடங்கியது முதல் கடந்த 8ம் தேதி வரையிலும் தவெக அறிவிப்புகளில் விஜய்யின் நெற்றில் பொட்டு இருந்த நிலையில், கடந்த 20ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பு கடிதத்தில் நெற்றிப்பொட்டு நீக்கப்பட்டிருக்கிறது.
மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்ற சில வசனங்களால் ஆத்திரமடைந்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, விஜய்யின் மதத்தை சுட்டிக்காட்டி விமர்சித்தார். விஜய் என்று சொல்லாமல் ‘ஜோசப்’விஜய் என்று குறிப்பிட்டுச்சொன்னார். இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், பத்திரிகைக்கு விஜய் அனுப்பிய லெட்டர் பேடு ஒன்றில் ஜோசப் விஜய் என்று இருந்தது. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
ஆனால், தவெக அறிவிப்பின் போது உள்ள லெட்டர் பேடில் விஜய் நெற்றிப்பொட்டுடன் இருந்ததும், அவர் பாஜக பின்னணியில் இயங்குகிறாரா? என்ற கேள்விகள் எழுந்தன. தொடர்ந்து தவெக லெட்டர்பேடுகளில் உள்ள விஜய்யின் நெற்றியில் பொட்டு இருந்தது.
கடந்த 8ம் தேதி அன்று தவெக கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துவிட்டதாக வெளியிட்ட அறிவிப்பின் லெட்டர்பேடிலும் விஜய்யின் நெற்றியில் பொட்டு இருந்தது. அதுவே அடுத்து செப்டம்பர் 15ம் தேதி அன்று பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளுக்கு வெளியிட்ட வாழ்த்து லெட்டர் பேடில் விஜய்யின் நெற்றியில் பொட்டு இல்லாமல் இருந்தது. அதைப்போலவே செப்டம்பர் 17ம் தேதி அன்றும் தந்தை பெரியாரின் பிறந்தநாளுக்கு விடுத்த வாழ்த்து லெட்டர்பேடிலும் விஜய்யின் நெற்றியில் பொட்டு இல்லாமல் இருந்தது.
எப்போதும் தவெக லெட்டர் பேடில் விஜய்யின் நெற்றியில் பொட்டு இருந்து வந்த நிலையில், அண்ணா, பெரியாருக்கு வாழ்த்து சொல்லும்போது மட்டும் அது காணாமல் போனது ஏன்? என்ற விவாதங்கள் எழுந்த நிலையில், அடுத்து செப்டம்பர் 20ம் தேதி அன்று கட்சியின் மாநில மாநாடு குறித்து அறிவிப்பு லெட்டர் பேடில் விஜய்யின் நெற்றியில் பொட்டு இல்லை.
பெரியார் நினைவிடத்திற்கு சென்று வந்தது பெரும் விவாதங்களை எழுப்பி நிலையில், மதச்சார்பு சம்பந்தமான எந்த அடையாளமும் வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறார் விஜய்.