பெயரளவில்தான் தலைவர் என்று இருக்கிறார் விஜய். எல்லா முடிவுகளையும் புஸ்ஸி ஆனந்துதான் எடுக்கிறார் என்று தவெக நிர்வாகிகள் பலர் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.
ஒன்றிய அமைச்சர் அருண்ராஜ் ஐ.ஆர்.எஸ். விஜய்க்கு ஆலோசகராக வேலை பார்க்கும் விசயம் வெளியே கசிந்ததில் இருந்து அருண்ராஜை விடவும் விஜய் ரொம்பவே அப்செட்டில் உள்ளார். அடுத்ததாக புஸ்ஸி ஆனந்த் கட்டுப்பாட்டிலேயே கட்சி இதே நிலைமையில் சென்றால் 2 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற முடியும் என்று பேசிய தவெக வியூக நிபுணர் ஜான் ஆரோக்கியசாமியின் ஆடியோ வெளியாகி விஜய் தலையில் மேலும் ஒரு இடியை இறக்கி இருக்கிறது.
ஒரு புதிய கட்சியில் மாற்றுக்கட்சியினர் வந்து சேருவதுதான் வழக்கம். அதற்கு இடம்கொடுக்காமல் இருக்கிறார் புஸ்ஸி என்று ஜான் அரோக்கியசாமியே குமுறியிருக்கிறார். புதிய கட்சியில் மாற்றுக்கட்சியினர் வந்து சேரும் நிலை மாறி, தவெகவில் இருந்து பலரும் வெளியேறத் தொடங்கிவிட்டனர்.
’’தவெகவில் நிர்வாக குளறுபடி உள்ளது. நிர்வாகிகளின் நடவடிக்கைகள் சரியில்லை. அதனால் தவெகவில் இருந்து வெளியேறுகிறோம்’’ என்ற குற்றச்சாட்டினை முன்வைத்து காரைக்கால் மாவட்ட தவெக வழக்கறிஞர் அணி, தவெக உறுப்பினர் அட்டையை கிழித்து போட்டுவிட்டு கூண்டோடு வெளியேறி இருக்கிறார்கள். இந்த விவகாரம் வேறு பெரிதாக வெடித்துள்ளது.
இந்த விசயங்கள் விஜய்க்கு ரொம்பவே டென்ஷனை கொடுத்திருக்கிறது. புஸ்ஸிக்க்கு தான் அதிகம் இடம் கொடுத்ததால்தான் மற்ற நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்கள். புஸ்ஸியின் அதிகாரத்தினால் கட்சியில் ஏற்பட்டிருக்கும் குளறுபடிகளை உணர்ந்த விஜய், புஸ்ஸி மீது ரொம்பவே எரிச்சலில் உ ள்ளாராம்.
இதனால் விஜய்யை சரிக்கட்ட வேண்டும் என்பதற்காகவும், இந்த அதிருப்தி நிலைமையை சாக்காக வைத்துக்கொண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளே நுழைந்துவிடுவாரோ என்கிற அச்சத்தில் கட்சிக்குள் சில அவசர நடவடிக்கைளை எடுக்க திட்டமிட்டிருக்கிறார் புஸ்ஸி.
அதனால்தான் அவசர அவசரமாக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி இருக்கிறார் புஸ்ஸி. நேற்றைக்கு கட்சி மீட்டிங் விசயத்தை விஜய்யிடம் புஸ்ஸி சொன்னபோது, ‘’எனக்கு ஷூட்டிங் இருக்கு. அதுதான் முக்கியம். அதை கேன்சல் பண்ண முடியாது. உங்க இஷ்டத்துக்கு என்னால ஆட முடியாது ’’ என்று சொல்லி சத்தம் போட்டிருக்கிறார் விஜய்.
ஆனால், விஜய் மீட்டிங்குக்கு வருவதாகச் சொல்லியே நிர்வாகிகளுக்கு போன் போட்டிருக்கிறார் புஸ்ஸி. இன்று காலையில் விஜய் வராமல் புஸ்ஸியே மீட்டிங் நடத்தியதால் நிர்வாகிகளுக்கு கடும் அதிருப்தி.
’’அடுத்த வாரம் மாவட்ட செயலாளர்களை அறிவிக்கிறார் தலைவர். அதற்கு முன்பாகவே தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த மா.செ.க்களுடன் தனித்தனியாக சந்தித்து உரையாடுகிறார்’’ என்று வந்திருந்த நிர்வாகிகளிடம் பேசி சமாளித்த புஸ்ஸி ஆனந்த், இந்த தகவலையே தவெக ஐடி விங் ஆட்களை வைத்துக்கொண்டு பரப்பி வருகிறார் புஸ்ஸி ஆனந்த்.
விஜய்யின் சம்மதம் இல்லாமலேயே இஸ்டத்திற்கு அடித்து விடுகிறார் புஸ்ஸி ஆனந்த் என்கிற விசயம் ஜான் ஆரோக்கியசாமி, வெங்கட்ராஜன் அய்யர் மூலமாக அறிந்துகொண்ட தொண்டர்கள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர். ஷீட்டிங் இல்லாத நாளாக பார்த்து மீட்டிங் வைக்க வேண்டியதானே தலைவர். மீண்டும் மீண்டும் புஸ்ஸியிடமே நம்மள கோத்து விடுறாரே? என்று புலம்பித்தவிக்கின்றனர்.
தலைவருக்கு ஷூட்டிங் இருப்பது கூட தெரியாமல் எப்படி மீட்டிங்குக்கு ஏற்பாடு செய்யுறார் புஸ்ஸி? தலைவர் கலந்துகொள்ளக்கூடாது என்பதற்காகவே இது மாதிரி எல்லாம் செய்கிறார் அவர். கட் அவுட் விவகாரம் உள்பட தொடர்ந்து இது மாதிரியே தலைவரை முன்னிலைப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார் புஸ்ஸி. இது தெரிந்தேதான் தனக்கு பனையூர் அரசியல் செய்வற்கு வசதியாக இருக்கிறது என்று விட்டுக் கொடுக்கிறாரா தலைவர்? என்று சந்தேக கேள்விகளை எழுப்புகின்றனர் தவெகவினர்.