திராவிடமும் தமிழ்தேசியமும் தவெகவின் இரு கண்கள் என்று விஜய் சொன்னதால், அவரை கடுமையாக விமர்சித்திருக்கிறார் நாம்தமிழர் சீமான். சாலையில் அந்த பக்கம் நிக்கணும், இல்ல இந்த பக்கம் நிக்கணும். நடு ரோட்டுல நின்னா லாரி அடிச்சு சாவ.. என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
விஜய்யுடன் ப்ரண்ட்ஸ் படத்தில் நடித்த விஜயலட்சுமி, சீமானுடன் இருக்கும் முன் விரோதத்தில் விஜய்க்கு ஆதரவாக பொங்கி எழுந்து வீடியோ வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ‘’என்ன மிஸ்டர் சீமான், சாபம் எல்லாம் விடுறீங்க? ரோட்டுல அந்த பக்கம் நிக்கணும், இல்ல இந்த பக்கம் நிக்கணும். நடுவுல நின்னா லாரியில அடிச்சு சாகணும்னு சாபம் எல்லாம் விடுறீங்க. நீங்க என்ன ரொம்ப உத்தமனா மிஸ்டர் சீமான்?
நான் உங்க ரூட்டுக்கே வர்றேன். அண்ணன் விஜய்யாகட்டும், திமுகவாகட்டும் கொள்கை ரீதியாகத்தானே தவறு செஞ்சிருக்காங்க. அப்படின்னு மக்கள் ஒன்னும் சொல்லல. நீங்க சொல்லிக்கிட்டு இருக்கீங்க.
கொள்கை ரீதியாக தவறு செய்யறவங்களே லாரி அடிச்சு சாவாங்கன்னா, எங்கள மாதிரி பெண்களோட வாழ்க்கையை சீரழிச்சு, எங்கள நடுரோட்டுல விட்டீங்களே.. நீங்க எது அடுச்சு சாவ மாட்டீங்க மிஸ்டர் சீமான்?
மொதல்ல உங்க கட்சியில இருக்குற ஓட்டையை எல்லாம் சரி பண்ணுங்க. திருச்சி சூர்யா உங்களோட ஆபாச வீடியோவை எல்லாம் ரிலீஸ் பண்ணி உங்களோட மானத்தை வாங்கப்போறாராம். அதெல்லாம் என்னன்னு முதல்ல போய் பாருங்க.
திமுகவுக்கு என்ன பண்ணணும்னு திமுகவுக்கு தெரியும். விஜய் அண்ணனுக்கு என்ன பண்ணனும்னு விஜய் அண்ணனுக்கு தெரியும்.
காலையில் எழுந்திருச்சா இப்படித்தான் சும்மா பப்ளிசிட்டி பண்ணிக்கிட்டு.. நீங்கதான் கூமுட்டை மாதிரி அலைஞ்சிக்கிட்டு இருக்கீங்க. பெரிய உத்தமர் மாதிரி சாபம் எல்லாம் விடாதீங்க. 24 மணி நேரமும் பெங்களூர்ல இருந்து நான் தான் சாபம் கொடுத்துட்டு இருக்கேனே.
கொள்கை ரீதியா தவறு செஞ்சவங்க லாரி அடிச்சு சாவாங்கன்னா நீங்க தமிழ்நாட்டு மக்களால ஒருநாள் செ..ல அடிச்சே சாவீங்க. ’’ என்று பேசி இருக்கிறார்.