ஆரம்பத்தில் இருந்தே கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சொல்லி வந்த தவெக, தாங்கள் நினைத்தது மாதிரியே சிபிஐ விசாரணையை பெற்றுவிட்டனர். ஆனால், அதிமுகவின் தயவால் போலியான கையெழுத்துகளால் சம்பந்தப் பட்டவர்களின் அனுமதி இல்லாமல் சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்டது அம்பலமாகி இருக்கிறது. சிபிஐ விசாரணையில் இது உறுதியானால் யானை தன் தலைமேலேயே மண்ணை வாரி இறைத்துக்கொண்ட கதையாகிவிடும் நிலை இருக்கிறது.
இது ஒரு புறமிருக்க, சிபிஐ விசாரணையில் விஜயின் கை பேக்கினையும் சோதனை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது.
கர்ணனுக்கு கவசம் குண்டலம் மாதிரியே எங்கு சென்றாலும் ஒரு கருப்பு நிற பேக்குடனேயே செல்கிறார் விஜய். நாமக்கல் பரப்புரையின் போது விஜய் உளறிக்கொட்டியதற்கும் இந்த பேக்கிற்குள் இருக்கும் சமாச்சாரம் தான் காரணம் என்கிறார்கள்.

’’விஜய தன்னோடு கொண்டு செல்லும் கருப்பு பையில் என்ன இருக்கிறது எனப்பல தகவல்கள் சொல்லப்படுகிறது. அதில் ஆபத்தான ஒரு தகவலும் வந்து சேர்ந்துள்ளது. சிபிஐ இதையும் விசாரிக்க வேண்டும்.
அந்தப்பையில் பல லட்சம் விலை உயர்ந்த மதுபானம் இருப்பதாகவும், அதை குடித்தால் மட்டுமே அவரால் செயல்பட முடியும் என்றும் சொல்கிறார்கள். அவரால் குடிக்காமல் இருக்கவே முடியாது என்றும், அதை குடித்துவிட்டு தான் நாமக்கல் கூட்டத்தில் உளறிக் கொட்டினார் என்பதும் தகவல். மேலும் கரூர் கூட்டத்திற்கு வரும் முன்னர் விளக்கை அணைத்துவிட்டு உள்ளே சென்றதும், குடிப்பதற்காகத்தான் என்பது கூடுதல் தகவல்.
குடிப்பது ஒருவரின் தனிப்பட்ட விசயமாக கூட இருக்கலாம். ஆனால் மக்கள் மத்தியில் பேச வரும் ஒருவர் நிதானமிழந்து பேசினால் வரும் எதிர் விளைவுகள் மோசமானதாகும்.
அவரது மேடைப்பேச்சுகள் எதுவுமே நிதானமானதாக இதுவரை இல்லை. அவர் மீது குடித்துவிட்டு பேசுகிறார் என்ற குற்றச்சாட்டு தவறு என்றால்,

விஜய் தன்னை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள தயாரா என்பது, அவர் குடித்துவிட்டு உளறுகிறார் என்ற குற்றச்சாட்டை வைப்பவர்களின் கேள்வியாக இருக்கிறது.
விஜய்க்கு கட்டுப்படுத்த முடியாத குடிப்பழக்கம் இருக்கிறதென்றால், அவரது உடல்நலத்தைக் கணக்கில் கொண்டு சொல்வது ஒன்று தான்.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர். குடித்துவிட்டு வாகனம் மீது ஏறி நின்று பேசாதீர்’’ என்கிறார் எழுத்தாளர் சூர்யா சேவியர்
