
ரஜினி சாரின் தீவிர ரசிகன் நான். அதனால் அவர் படம் என்றதும் கதை பற்றி எல்லாம் கேட்காமல் கேமியோ ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று கூலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசி இருந்தார் அமீர்கான்.
இங்கே கமல் மாதிரி வடநாட்டில் 10 கமலுக்கு சமம் அமீர்கான் என்று ரஜினியும் அந்த விழாவில் புகழ்ந்திருந்தார்.
பெரும் எதிர்பார்ப்பில் வந்த கூலி படத்தை திட்டமிட்டு சிலர் நெகட்டிவ் விமர்சனம் செய்து வந்தனர். தயாரிப்பாளர் தனஞ்செயனே சிலரின் தூண்டிதலின் பேரில் நெகட்டிவ்வாக பேசி வந்தார். ரஜினியின் பி.ஆர்.ஓ. ரியாஸ் எச்சரித்து வீடியோ வெளியிட்ட பின்னர் இந்த விமர்சனம் குறைந்தது.

படத்தில் அமீர்கானை காமெடியன் போல் காட்டிவிட்டார் லோகேஷ் கனகராஜ். இதை வைத்து பாலிவுட்டில் ட்ரோல் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இதில் அதிருப்தி அடைந்த அமீர்கான், இதில் என் தவறு எதுவும் இல்லை. ரஜினிசார் படம் என்பதால் கதை கேட்காமல் நடித்தேன். அதுதான் நான் செய்த பெறும் தவறு. இனிமேல் இப்படி செய்யமாட்டேன். கூலி படத்தில் என்ன விமர்சனம் வந்தாலும் அதற்கு முழு காரணமும் லோகேஷ் கனராஜ்க்குத்தான் பொறுப்பு என்று மனம் நொந்து பேட்டி கொடுத்திருப்பதாகவும், அமீர்கானின் இந்த பேட்டியால் ரஜினி ரொம்பவே வறுத்தத்தில் உள்ளார் என்றும் சமூக வலைத்தளங்களில் சிலர் பேசி வந்தனர்.

கூலி பட ரிலீஸ் அன்று விஜயின் ஆதரவாளர்கள் இட் இஸ் பிரசாந்த் உள்ளிட்ட பலரும் படத்தை பற்றி நெகட்டிவாக பேசினர். கூலி படத்தையே பார்க்காமல் மதுபோதையில் தியேட்டர் வாசலில் நின்றுகொண்டு, படம் பார்த்துவிட்டு வந்தது மாதிரி நின்று கொண்டு, லியோ அளவுக்கு கூலி படம் இல்லை என்று விமர்சனம் செய்தனர். இந்த விவகாரம் அத்தோடு முடிந்ததா? என்றால் இல்லை.

ஓடிடி தளத்தில் கூலி படம் ரிலீசான பிறகும் கூட இது தொடர்கிறது.
விஜயின் ஆதரவாளர்களின் இந்த பொய்ப்பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமீர்கான் சார்பில் அவரது நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், சமூக வலைத்தளங்களில் வருவது மாதிரி கூலி படம் தொடர்பாக அமீர்கான் எந்த விமர்சனமும் செய்யவில்லை என்றும், இன்னமும் அவர் கூலி படமே பார்க்கவில்லை என்றும், லோகேஷ் கனராஜுடன் இணைந்துதான் படத்தை பார்க்கும் ஆவலில் உள்ளார் அமீர்கான். அந்த சந்தர்ப்பம் இன்னும் அமையவில்லை என்பதால் அமீர்கான் இன்னமும் கூலி படத்தையே பார்க்கவில்லை என்று விளக்கம் அளித்திருக்கிறது.