விஷாலின் உடல்நிலை தற்போது இருக்கும் சூழலில் அவரால் படங்களில் நடிக்க முடியாது என்பதால், இந்த நிலையில் படங்களில் நடித்தால் உடல்நிலை மேலும் மோசமடையும் என்பதால் அவரின் உடநிலையை சரி செய்ய வேண்டும். அதுதான் இப்போது முக்கிய என்ற முடிவுக்கு வந்துள்ளனர் விஷாலின் நண்பர்கள்.
ஆக்ஷன் நாயகனாக அதகளம் செய்து வந்தவர் விஷால். அவரை அப்படிப் பார்த்தபோது ரசிகர்கள் அதிர்ந்தனர். 12 வருடங்களுக்கு முன்பாக ரிலீஸ் ஆக வேண்டிய மதகஜராஜா படம் வரும் 12ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆகிறது. பல்வேறு பிரச்சனைகளை தாண்டி இப்படம் திரைக்கு வருகிறது.
இதை முன்னிட்டு நடந்த விழாவில், படத்தின் இயக்குநர் சுந்தர் சி, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலரும் வந்திருந்தனர். இந்த விழாவிற்கு பலரின் கைத்தாங்கலோடு விஷால் வந்ததுதான் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அடுத்ததாக மேடையில் அவர் மைக் பிடித்து பேசியபோது, கைகள் தொடர்ச்சியாக நடுங்கிக்கொண்டே இருந்தது. ஷோபாவில் உட்கார்ந்து மைக்கை பிடித்தபோதும் கைகள் அதிகமாக நடுங்க, ஷோபாவில் மைக்கை அழுத்தி வைத்து பேலன்ஸ் செய்தார் விஷால்.
விஷாலுக்கு கடும் காய்ச்சல். அதையும் மீறி அவர் விழாவிக்கு வந்திருக்கிறார் என்று சொன்னார் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினி டிடி. ஆனாலும், விஷாலின் இந்த நிலைமைக்கு காரணம் பெண் சகவாசம் மற்றும் வேறு வேறு சகவாசம் என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
விஷாலின் உடல்நிலை குறித்து கடந்த இரண்டு தினங்களாக பல்வேறு செய்திகள் பரவி வரும் நிலையில் அவரது நண்பர்கள் நேரிலும் செல்போனிலும் நலன் விசாரித்து வருகின்றனர். விஷாலின் நெருங்கிய நண்பர்கள் விஷாலை இந்த நிலையில் இருந்து மீட்டெடுக்க முயன்று வருகின்றனர்.
துப்பறிவாளன் -2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் விஷால் நடித்து வந்த நிலையில், உடல்நிலை சரியானால்தான் அந்த படங்களில் நடிக்க முடியும் என்பதால் விஷாலை குனப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளனர் நண்பர்கள்.