
காதல் ரசம் சொட்டச் சொட்ட படங்களையும் பாடல்களையும் தந்தவர் டி.ராஜேந்தர். அவர்தான் விஷால் – தன்ஷிகா காதலுக்கு முதல் புள்ளி வைத்திருக்கிறார். அடுத்தடுத்த புள்ளிகளுக்குப் பின்னர் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி அன்று மணக்கோலத்தில் நிற்கப்போகிறார்கள் காதலர்கள்.
தந்தை தயாரிப்பாளர், அண்ணன் ஒரு நடிகர் என்று இருந்த சினிமா குடும்பத்தில் இருந்து இயக்குநர் ஆகும் எண்ணத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் விஷால். இயக்குநர் காந்திகிருஷ்ணாவின் அறிமுகம் கிடைக்க ‘செல்லமே’ படத்தின் மூலம் நாயகன் ஆனார். திமிறு, சண்டைக்கோழி படங்களின் மூலம் ஆக்ஷன் நடிகர் ஆனார்.
மதகஜராஜா படத்தில் நடித்ததில் இருந்து நடிகை வரலட்சுமியுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டு வந்தார் விஷால். இருவரும் சில வருடங்கள் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வருவதாகவும் செய்திகள் பரவின. இதையடுத்து லட்சுமிமேனன் உள்ளிட்ட சில நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தார் விஷால். 2019இல் அனிஷா ரெட்டியுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. என்ன ஆனதோ தெரியவில்லை அந்த திருமணம் நடைபெறவில்லை.
இப்போது நடிகை தன்ஷிகாவை கரம் பிடிக்கிறார் விஷால். இவர்களது காதலுக்கு முதல் புள்ளியை வைத்தவர் டி.ராஜேந்தர் என்கிறார்கள்.

கடந்த 2017ஆம் ஆண்டில் மீரா கதிரவன் இயக்கத்தில் விழித்திரு படத்தின் விழாவில் பேசும்போது டி.ராஜேந்தர் பெயரைச் சொல்லாமல் விட்டுவிட்டார் தன்ஷிகா. இதனால் ஆத்திரப்பட்ட டி.ஆர்., ’’சூப்பர் ஸ்டாரோட கபாலி படத்துல நடிச்சதால டி.ராஜேந்தர் பக்கத்துலயே உட்கார்ந்துட்டு யார் இவருனுக்கு கேட்டுக்கிட்டு இருக்குற? அதுதான்யா உலகம். மேடையில பேசும்போது கூட என் பேரைச் சொல்லல. நீ எல்லாம் என் பேரச் சொல்லியா நான் வாழப்போறேன்.
நான் ஹன்சிகாவ பத்தியே கவலைப்படாதவன். தன்ஷிகாவைப் பத்தியா கவலைப்படுவேன்’’ என்று பேசியதும் நடிகர்கள் கிருஷ்ணா, விதார் உட்படனை அனைவருமே சிரித்தனர். தனிஷிகாவும் கூட சிரித்தார்.
அத்தோடு விடாத டி.ராஜேந்தர், ‘’மலையோடு நடிச்ச பிறகு மடு பத்தி எல்லாம் தெரியாது’’ என்று சொன்னார். அதற்கு தன்ஷிகா, ‘’அப்படி எல்லாம் இல்ல சார்..’’ என்றார்.
’’இதுதான் உலகத்தோட ஸ்டைல்’’ என்று டி.ஆர். சொல்லவும், ‘’ஷாரி சார்’’ என்று தன்ஷிகார் சொல்ல, ‘’நீ கட்டிட்டு வரல சாரி. இப்ப சொல்ற ஷாரி’’ என்றார் டி.ஆர்.
அதுக்கு பிறக்கும் ‘’ஷாரி சார்’’ என்று தன்ஷிகா சொல்ல, ‘’இல்லம்மா மேடையில நாகரிகம்னு ஒண்ணு இருக்கு..’’ என்று டி.ஆர். அடிக்கிக்கொண்டே போக அழுதுவிட்டார் தன்ஷிகா. பின்னர் இயக்குநர் மீரா கதிரவன் மேடையேறி டி.ஆரை சமாதானப்படுத்தினார்.
இந்த வீடியோவைப் பார்த்த நடிகர், நடிகைகள் திரையுலக பிரபலங்கள் பலரு தன்ஷிகாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். டி.ஆரின் செயலுக்கு கண்டனமும் தெரிவித்தனர்.
நடிகர் விஷால் நீண்ட ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், ’’மேடையில் டி.ஆர். சார் பெயரைச் சொல்லாததற்கு மன்னிப்பு கேட்ட பிறகும் தொடர்ந்து தன்ஷிகாவை டார்கெட் செய்தது தவறு. மேடையில் இப்படி யாராவது ஒரு பெயரை சொல்ல மறப்பது இயல்பான விசயம். எனக்கே அப்படி பல சம்பவங்கள் உண்டு. மன்னிப்பு கேட்டு டி.ஆரின் காலில் விழுந்த பிறகும் தன்னோட பொண்ணு வயசுல இருக்குற தன்ஷிகாவ டி.ஆர். மன்னிக்கல.
எனக்கு தன்ஷிகாவ ரொம்ப நல்லா தெரியும். அவுங்க வேணும்னே இத பண்ணியிருக்க மாட்டாங்க. அவுங்க மன்னிப்பு கேட்ட பிறகாவது டி.ஆர். விட்டிருக்கணும். டி.ஆரின் இந்த நடவடிக்கையை நான் வன்மையாக கண்டிக்கிறேன்’’ என்று தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே நட்பாக பழகி வந்த விஷாலும் தன்ஷிகாவும் டி.ஆர். சம்பவத்திற்குப் பின்னர் தன்ஷிகாவுக்கு ஆறுதல் சொன்னதன் மூலம் காதலர்களாக மாறிப்போனார்கள்.
நடிகர் சங்க கட்டிடம் திறந்த பின்னர்தான் தனது திருமணம் என்று சொல்லி இருந்தார் விஷால். நடிகர் சங்க கட்டிடம் திறப்பு விழா காணும் வகையில் அக்கட்டிடத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் ‘யோகிடா’ படத்தின் விழாவில் விஷால் – தன்ஷிகா காதலை அறிவித்தார் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார். பின்னர் விஷாலும் தன்ஷிகாவுமே அதை உறுதிப்படுத்தி உள்ளனர்.