உலக பணக்காரர்கள் பட்டியலில் 10வது இடத்தில் இருப்பவர் வாரன் பப்பட்(93). பங்குச்சந்தைகளின் பிதாமகன், சக்கரவர்த்தியா இவர் தனது சொத்துக்களை எல்லாம் அறக்கட்டளைகளுக்கு எழுது வைத்து வந்தார். கடைசியாக உள்ள 10 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களையும் அறக்கட்டளைக்கு எழுதி வைத்திருக்கிறார் என்று தகவல்.
இள்மைப்பருவத்தில் போராடி வெற்றியை பெற்றவர். பள்ளிப்பருவத்திலேயே மளிகைக்கடையில் வேலை , பேப்பர் டெலிவரி பாய், முத்திரைத்தாள் விற்பனை என்று பிஸியாக இருந்தவர். இதில் சம்பாதித்த பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர். இதன் மூலம் பின்னாளில் உலகின் மிகப்பெரும் பங்கு நிறுவன தலைவராக வளர்ந்தார்.
சூசி, ஹோவி, பீட்டர் என்று வாரன் பஃப்பட்டிற்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். மூன்று பேருமே தனித்தனியாக அறக்கட்டளைகளை நிர்வகித்து வருகின்றனர்.
இந்த அறக்கட்டளைகள் ஏழை மக்களுக்கு கல்வி , மருத்துவம் , உணவு உள்ளிட்ட சேவைகளை வழங்குகின்றன.
தான் சின்னவயதில் பட்ட கஷ்டத்தை யாரும் படக்கூடாது என்றுதான் தான் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் அறக்கட்டளைகளுக்கே அளித்து விடுகிறார் வாரன் பப்பெட்.
சமீபத்தில் பில் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கும் மேலும் மூன்று அறக்கட் டளைகளுக்கும் 44 ஆயிரம் கோடி ரூபாயை வழங்கிய வாரன் பப்பெட், கேட்ஸ் அறக்கட்டளைக்கு மட்டும் இதுவரை 3 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கி இருக்கிறார். மிச்சமிருக்கும் 10 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களையும் அவர் புதிய அறக்கட்டளை ஒன்றுக்கு உயில் எழுதி வைத்திருப்பதாக தகவல். அந்த அறக்கட்டளையின் கண்காணிப்பாளர்களாக தனது பிள்ளைகள் இருப்பார்கள் என்றும் உயிலில் குறிப்பிட்டிருக்கிறாராம் காரன் பப்பெட்.