மூன்றாண்டுகளுக்கு பின்னர் மூன்று பேர் போட்டியில் வென்றிருக்கிறார் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி. ரஜினியின் விருப்பம் இல்லாமல் கமல் எடுத்த முடிவு இது என்ற பேச்சு எழுந்திருக்கிறது.
கல்லூரி வாழ்க்கை, நட்பு, குடும்ப உறவுகளை மையமாக வைத்து கடந்த 2022ல் வெளிவந்த ‘டான்’ படம் நல்ல வரவேற்பினைப் பெற்றது. இயக்குநர் அட்லீயின் உதவி இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இப்படம் சிவகார்த்திகேயனுக்கு இப்படம் ஒரு பெருஒம் வெற்றிப்படமாக அமைந்தது.

இதையடுத்து சிபி சக்கரவர்த்திக்கு வாழ்த்து சொன்ன ரஜினி அவரிடம் கதை கேட்டபோதும் அவரும் ஒரு கதையைச் சொல்லி ஓகே வாங்கி இருந்தார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிப்பதாக இருந்தது. இடையில் சிபி சக்கரவர்த்தியின் நடவடிக்கையில் ரஜினிக்கு திருப்தி இல்லாமல் போனதால் அப்படம் நின்றுவிட்டது.
இதன் பின்னர் ’பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், ’டிராகன்’ பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவிடமும் கதை கேட்டிருந்தார் ரஜினி. ‘ குரங்கு பொம்மை’, ‘ மகாராஜா’ இயக்குநர் நித்திலனிடமும் கதை கேட்டு ஓகே செய்திருந்தார் ரஜினி.

இதற்கிடையில் சுந்தர்.சி. காமெடி கலந்த பேய்க்கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டார் ரஜினியிடம். கமல்ஹாசன் தயாரிப்பதாக அறிவிப்பும் வந்தது. படத்தின் திரைக்கதையில் ரஜினிக்கு திருப்தி இல்லாமல் போனதால் சுந்தர்.சி. அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார்.

இதன் பின்னர் ராம்குமார் பாலகிருஷ்ணன், அஸ்வத் மாரிமுத்து, நித்திலன் ஆகியோரிடம் மீண்டும் கதை கேட்டு அதில் திருத்தங்கள் செய்யச் சொல்லி இருந்தார் ரஜினி. இதில் ராம்குமார் பாலகிருஷ்ணன், நித்திலன் ஆகியோரின் ஸ்கிரிப்ட் ரஜினிக்கு பிடித்திருந்தது. இந்த இருவரில் ஒருவர்தான் ரஜினியின் 173ஆது படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனமோ, ஏற்கனவே ரஜினிக்கு கதை சொல்லி இருந்த சிபி சக்கரவர்த்தியின் ஸ்கிரிப்ட் திருப்தியாக இருந்ததால் அவரையின் பரிசீலனையில் கொண்டு வந்து அவரையே தேர்வு செய்துவிட்டது. நித்திலன் , ராம்குமார் இருவரில் ராம்குமார்தான் இப்போதைக்கு ரஜினியின் முடிவாக இருந்திருக்கிறது. சிபி சக்கரவர்த்தி மீது அதிருப்தியில் இருந்த ரஜினிக்கு கமல் எடுத்த முடிவு அதிர்ச்சியளிக்கும் என்கிறார்கள்.
ஆனால் ரஜினியின் விருப்பத்தின் பேரில்தான் இது அமைந்தது என்று ஒரு தகவல். சுந்தர்.சி படம் மாதிரியே காமெடி கலந்த குடும்பக்கதையை எதிர்பார்த்திருந்த ரஜினியின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி ஒரு கதையை ரெடி செய்து அதை ரஜினியிடம் தெரிவிக்க கதையை கேட்டுவிட்டு உடனே இப்படத்தில் நடிக்க முடிவு எடுத்து ரஜினிதான் ராஜ்கமலுக்கு சிபி சக்கரவர்த்தியை அனுப்பி வைத்ததாக தகவல்.

இதையடுத்து கமல்ஹாசன் நடிப்பில் ரஜினி நடிக்கும் 173ஆவது படத்தை சிபி.சக்கரவர்த்தி இயக்குவதாக இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மூன்றாண்டுகள் காத்திருந்து இந்த வாய்ப்பை பெற்றிருக்கிறார் சிபி.சக்கரவர்த்தி. ரசிகர்களுக்கு 2027 பொங்கல் விருந்தாக இப்படம் வரவிருக்கிறது.
ரஜினி படம் இல்லாமல் போனதால் சிவகார்த்திகேயனை வைத்து மீண்டும் படம் இயக்கச் சென்றிருந்தார். மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் தயாரிப்பதாக இருந்தது. இப்போது ரஜினி படத்தை இயக்குவதாக அறிவிப்பு வந்ததால் மலேசிய தொழிலபதிரிடம் சமாதானப்பேச்சு நடந்திருக்கிறது என்று தெரிகிறது.
