ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்தி நடித்திருந்தார். அப்போதே எம்.ஜி.ஆர். நடித்த படத்தின் பெயரை எப்படி வைக்கலாம்? என்ற சலசலப்பு எழுந்தது. ஆனாலும் கூட சிவக்குமார் மகன் கார்த்தி படத்தின் ஹீரோ என்பதால் பலரும் எதிர்ப்பு தெரிவிக்காமல் விட்டுவிட்டனர். அதில் ஒருவர் நடிகர் சத்யராஜ்.

எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் சத்யராஜ். ’ரொம்ப அரக்கத்தனமான ரசிகன்’ என்று சத்யராஜே விழா மேடையில் சொன்னார். ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு பிறகு இப்போது ‘வா வாத்தியார்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார் கார்த்தி. சினிமாவில் எம்.ஜி.ஆரைத்தான் எல்லோரும் வாத்தியார் என்று அழைத்தது வழக்கம். இதனாலும் ஒரு சலசலப்பு ஓடிக்கொண்டிருக்கிறது.
இது குறித்து ’வா வாத்தியார்’ படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சத்யராஜ், ’’ஒரே ஒரு வாத்தியார்தான். அது எம்.ஜி.ஆர்.தான். ’வா வாத்தியார்’என்று எங்க வீட்டுப்பிள்ளை கார்த்தி நடிப்பதில் சந்தோசம்.

நல்ல வேளையாக ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கார்த்தி நடித்திருந்தார். வேறு யாராவது நடித்திருந்தால் உள்ளுக்குள் குபுகுபுவென்று கொதித்திருக்கும். நம்ம கார்த்திதானப்பா.. ஆயிரத்தில் ஒருவனில் நடிச்சுட்டு போகட்டும்ப்பான்னு விட்டாச்சு’’என்றார்.
