
ஐபோன் 17 வரிசையில் ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட் போனுக்கு சந்தையில் அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் புதிய மாடல்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று இரவு 10.30 மணிக்கு ’ஐபோன் 17 ஏர்’ ஸ்மார்ட் போன் மாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் யூடியூப் சேனலிலும் இதன் நேரலையைக் காணும் வசதி செய்யப்பட்டுள்ளது.
தொழில் நுட்ப பிரியர்கள் மட்டுமல்லாது, ஐபோன் பிரியர்களும் இந்த புதிய மாடலை எதிர்பார்த்து இருக்கின்றனர்.
அமெரிக்காவில் 899 டாலர்களுக்கு விற்பனையாக இருக்கும் இந்த ஐபோன் இந்தியாவில் ₹1,19,900 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஐபோன் 17 ஏர் சிறப்பம்சங்கள் என்னென்ன?
*இதற்கு முன் வெளியான ஐபோன்களின் தடிமனை விடவும் ஐபோன் 17 ஏர் 5.5 மி.மீ. மட்டுமே தடிமன்
*இவ்வளவு மெல்லியதாக இருந்தாலும் 6.6இன்ச் பெரிய டிஸ்ப்ளே
*6.6-இன்ச் OLED, 120Hz ப்ரோமோஷன், ~2740 x 1260 தெளிவுத்திறன்
*சுமூகமாக இயங்கும் வகையில் தொடுதிரை120hz திறன் கொண்டது
*பின்புறம் 48mp கேமரா ,முன்பக்கம் 24mp கேமரா
*வயர் இல்லாமல் சார்ஜ் செய்யும் வசதி
*2800Mah பேட்டரி திறன், 2800mAh, அதிக அடர்த்திக்கான புதிய சிலிக்கான்-அனோட் தொழில்நுட்பம்
*A19 சிப்செட், சேம்பர் கூலிங் தொழில்நுட்பம்
*A19 சிப் (3nm N3P செயல்முறை)
*டைட்டானியம், அலுமினிய உலோகத்தால் ஆன புற வடிவமைப்பு
*எடை 145 கிராம்
*ஈ சிம் வசதி
*ஐபோன் முந்தைய மாடல்களை காட்டிலும் 30% அதிக பிரகாசம்
*வட்டமாக இல்லாமல் நீள்வட்ட வடிவிலான கேமரா
*ரேம் 12GB
*ஆப்பிள் வடிவமைத்த 5G மோடம் (6GHzக்குக் கீழே மட்டும், mmWave இல்லை
*35W வரை வயர்டு, Qi 2.2 வயர்லெஸ் சார்ஜிங் சாத்தியம்