
தவெக நிகழ்வுகளில் பங்கேற்று உயிரிழக்கும் தொண்டர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்ல விரும்பாதவராக இருக்கிறார். கரூர் துயர சம்பவத்திலும் அதையே தொடர்கிறார். அதற்காக ஒரு மன்னிப்பு கூட சொல்ல மனமில்லாதவராக உள்ளார் விஜய்.
கரூர் துயர சம்பவத்தின் சோகம் மறைவதற்குள் தவெகவின் அடுத்தக்கட்ட பயணம் குறித்து பேச ஆரம்பித்துவிட்டார் விஜய். இது மாதிரி விஜய் தொடர்ந்து செய்யும் தவறுகளை பட்டியலிட்டுள்ளார் விமர்சகர் புளூ சட்டை மாறன்.
* மரம், மின்சார கம்பிகள், கட்டடங்கள் என அனைத்திலும் சகட்டுமேனிக்கு ஏறும் ரசிகர்களை.. கட்டுப்படுத்துவதில் தொடர்ந்து தோற்பது.
* விழுப்புரம் மாநாடு நடந்த நேரத்தில்.. இறந்த தொண்டர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறாதது.
* வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்காமல்.. பனையூர் ஆபீஸ்க்கு வர வைத்தது.
* மீடியாவை ஒருமுறை கூட சந்திக்காமல் தொடர்ந்து தவிர்த்து வருவது.
* மொக்கையான நபர்களை ஆலோசகர்களாக வைத்திருப்பது.
* தவெகவில் இருப்பவர்களில் 95% பேர் ரசிகர்களாக மட்டுமே. பொறுப்புள்ள தொண்டர்களாக மாறவில்லை என்பதை உணராதது.

இவற்றுக்கெல்லாம் முன்மாதிரியாக..
* கோயம்பேடு ரோகிணி தியேட்டர் இருக்கைகள் அனைத்தையும் உங்கள் ரசிகர்கள் நாசம் செய்தபோது.. அதை கண்டிக்காமல் அமைதி காத்தது. அந்த பாதிப்பிற்கு நஷ்ட ஈடு தராதது.
* FDFS நள்ளிரவு காட்சிகளின்போது அசம்பாவிதம் நடக்க வாய்ப்புண்டு என உணர்ந்து.. தயாரிப்பாளர்/விநியோகஸ்தர்களிடம் பேசி.. காலைக்காட்சிகள் மட்டுமே போதுமென கூறாதது.
* ப்ளாக்கில் டிக்கட் விற்பனை நடக்கும்போது… என் ரசிகர்கள் யாரும் ப்ளாக் டிக்கட் வாங்க வேண்டாம். அரசு நிர்ணயித்த ரேட்டில் மட்டுமே வாங்குங்கள் என அறிவுறுத்தாதது.
*இந்த சினிமா சார்ந்த விதிமீறல்களுக்கு.. ஒரு கண்டனம் கூற தெரிவிக்காமலும், ரசிகர்களை முறைப்படுத்தாமலும்.. வேடிக்கை பார்த்ததன் பலன்.. அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு அனுபவிக்க வேண்டியுள்ளது.
‘இன்னும் ஸ்ட்ராங் ஆக நம் அரசியல் பயணம் தொடரும்’ என உங்கள் ரசிகர்களுக்கு செய்தி கூறியுள்ளீர்கள்.
அவர்களை ஒழுங்குபடுத்தாதவரை… தவெக தேர் முன்னோக்கி நகர வாய்ப்பில்லை.