
நேற்று விஜய் பேசிய பேச்சில் சூடாகி தவெகவில் இருந்து விலகிக் கொண்டிருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.
நரேந்திரமோடி, மம்தா பானர்ஜி, ஜெகன் மோகன் ரெட்டி, மு.க.ஸ்டாலின் என்று நாட்டில் பல முக்கிய தலைவர்களுக்காக தேர்தல் வியூக நிபுணராக இருந்துள்ளார்.
இவர் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் வியூக நிபுணராக பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
பிரசாந்த் கிஷோரிடம் பணிபுரிந்த ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி இருவரும் தவெகவில் இருந்ததால் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசி இருந்தார் பிரசாந்த் கிஷோர். முன்னதாக விஜய் கட்சி தொடங்கும் முன்னரே பெங்களூருவில் படப்பிடிப்பில் இருந்த விஜயை சந்தித்து அரசியல் ஆலோசனைகளை வழங்கினார் பிரசாந்த் கிஷோர் என்று செய்திகள் பரவின.

அதிமுகவுக்கு தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்கும் பணிகளில் ஈடுபடுவதை விட்டு, அதிமுக யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது குறித்து பாடம் எடுக்க, குறிப்பாக தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று சொன்னதோடு அல்லாமல், தவெகவுடன் கூட்டணி குறித்து பேசுகிறேன் என்று சொல்ல கடுப்பான பழனிசாமி, தேர்தல் வேலை செய்யத்தான் உங்களை வரச்சொன்னேன். கூட்டணி பற்றி எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னவர், போதும் நீங்க கிளம்பலாம் என்று சொல்லி பிரசாந்த் கிஷோர் பேக் அப் செய்து அனுப்பி வைத்துவிட்டார்.
அத்தோடு விடாமல், அதிமுகவுக்கு பணியாற்றுவதற்காக கொடுத்திருந்த முன் பணத்தையும் திரும்ப வாங்கிக்கொண்டார் பழனிசாமி. இதில் கடுப்பாகித்தான் விஜயை சந்தித்து, 25 சதவிகித வாக்கு சதகிதம் இருக்குது என்று அள்ளிவிட்டு, நீங்கள்தான் முதலமைச்சர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்று உசுப்பேத்தி விட்டார்.

இதில் குளிர்ந்து போன விஜய், எந்த கட்சியும் செய்யாத ஒரு வேளையை செய்தார். தவெக மேடையில் பிரசாந்த் கிஷோரை ஏற்றி பேச வைத்தார். இது வரையிலும் எந்த கட்சியும் இதைச்செய்தாத நிலையில் விஜய் செய்தது தவறு என்ற விமர்சனங்கள் எழுந்தன.
நேற்று நடந்த தவெக செயற்குழுவில் திமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்த விஜய், அதிமுகவை மறைமுகமாக மட்டுமே தாக்கினார். விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்றும் தவெக தீர்மானம் நிறைவேறியது.
இந்நிலையில் இன்று திடீரென்று தவெகவுக்கு தேர்தல் வேலை பார்ப்பதில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.
பீகாரில் தேர்தல் பணியில் முழுமையாக இறங்கியுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளாத பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருக்கிறார். நவம்பர் மாதத்திற்கு பிறகு விஜய்க்கு ஆலோசகராக தொடர்வதற்கான முடிவை எடுப்பேன் என்றும் கூறி இருக்கிறார்.

பீகார் தேர்தல் பணி இன்றைக்குத்தான் பிரசாந்த் கிஷோருக்கு தெரியுமா? நேற்று விஜய் செயற்குழுவை கூட்டி இருக்கும் நிலையில் இன்று ஏன் இந்த முட்வை அறிவிக்க வேண்டும்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
பழனிசாமி துரத்தி அடித்ததோடு அல்லாமல் அட்வான்ஸ் பணத்தையும் பிடுங்கிக்கொண்டதால் அதிமுக மீது கோபத்தில் இருக்கும் பிரசாந்த் கிஷோர், நேற்றைக்கும் அதிமுகவை தாக்கி பேசாததால் ஆத்திரத்தில் இந்த முடிவை எடுத்ததாக தகவல் பரவுகிறது.

திமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று உறுதியாக சொல்லிவிட்டதால் கடுப்பில் இருக்கும் பாஜக மேலிடம் என்.டி.ஏ. அணிக்கு தேர்தல் பணியாற்றச் சொல்லி அழைத்திருப்பதால் இந்த முடிவை அறிவித்தாரா? என்றும் கேள்வி எழுந்திருக்கிறது.
இது தவிர, பனையூர் வட்டாரத்தில் இருந்தும் ஒரு தகவல் பரவுகிறது. நேற்று செயற்குழு நடப்பதற்கு முன்பாக செயற்குழுவின் தீர்மானம் தொடர்பாகவும், விஜய்யின் சுற்றுபயணம் தொடர்பாகவும் பிரசாந்த் கிஷோருடன் ஏற்பட்ட விவாதத்தில் அவர் அதிருப்தி அடைந்துதான் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் சொல்கிறது பனையூர் வட்டாரம்.