கட்சிக்கு துரோகம் செய்துவிட்டார் என்று சொல்லி செங்கோட்டையனை அதிமுகவை விட்டு நீக்கி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கட்சி விதிகளின்படி தன்னை நீக்கியது செல்லாது என்றும், பழனிசாமியே தற்காலிக பொதுச்செயலாளர்தான் என்றும் பேட்டி அளித்தார் கே.ஏ.செங்கோட்டையன்.
*ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கூவத்தூரில் அதிமுகவை வழிநடத்துவதற்கு அன்று எல்லோரையும் அழைத்துப் பேசி, எல்லோரின் கருத்துக்களையும் பகிர்ந்த பின்னர், என்னிடத்தில் 1 மணி நேரம் பேசினார் சசிகலா
*கட்சி உடைந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்
*எடப்பாடி பழனிசாமிக்கு நான் பரிந்துரை செய்ததோடு அல்லாமல், எல்லோரிடத்திலும் ஒப்புதல் கடிதம் பெற்று, பத்திரிகையாளர்களிடமும் அதை படித்துக்காட்டினேன்
*பொதுச்செயலாளர் ஆனது முதல் எடப்பாடி பழனிசாமியால் ஒரு தேர்தல் வெற்றியைக் கூட பெற முடியவில்லை
*இதன்பின்னர்தான் அதிமுகவில் ஒருங்கிணைப்பு தேவை என்பதை உணர்ந்து 6 பேரும் சென்று எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தினோம்
*பல கோடி தொண்டர்களின் எதிர்பார்ப்பினைத்தான் பிரதிபலித்தோம்
*ஆனால், யாருமே என்னை சந்திக்கவில்லை. அது பச்சைப்பொய் என்று சொன்னார் பழனிசாமி
*அதன்பின்னரும் பழனிசாமியை சந்தித்து பேசினோம். அதிலும் பலனில்லை
*அதன்பின்னர்தான் வேறுவழியின்றி பொதுவெளியில் பேசினேன்
*நான் விதித்தது கெடு அல்ல, பேசி முடிவெடுக்க வேண்டும் என்றுதான் சொன்னேன்
*இதனால் என் பொறுப்புகள் பறிக்கப்பட்டன
தேவர் ஜெயந்தியில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் பேசியதால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளேன்
*இதனால் மன வேதனை அடைகிறேன்; கண்ணீர் சிந்துகிறேன்
*இரவு முழுவதும் நான் தூங்கவில்லை
*என்னை நீக்கும்போது திமுகவின் பி டீம் என்றார்கள். பி டீம் யார் என்பதை நாடறியும்
*எடப்பாடி பழனிசாமி பொறுப்புக்கு வருவதற்கு முன்னாலேயே நான் அதிமுகவில் பொறுப்பில் இருந்தவன்
*அதிமுகவின் விதிகளை வகுத்து வைத்திருக்கிறார் எம்.ஜி.ஆர். 43 பக்கத்தில் உள்ளது போன்று என்னை நீக்க முடியாது
*தற்காலிக பொதுச்செயலாளர்தான் பழனிசாமி.
53 ஆண்டுகால சீனியர் என்னை நீக்குவதற்கு முன்பு எனக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும்
*யாரை வேண்டுமானாலும் தூக்கியடிக்கும் சர்வாதியாக இருக்கிறார் பழனிசாமி
*அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் நான் துரோகம் செய்துவிட்டேன் என்று சொல்கிறார் பழனிசாமி
*இது பொய் என்பதற்கான வீடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளன, அவற்றை வெளியிடுவேன்
*சசிகலாவிடம் இருந்து எப்படி பழனிசாமி பதவியை பெற்றார் என்பதை நாடறியும். எல்லோருக்கும் துரோகம் செய்வதற்காக பழனிசாமிக்கு நோபல் பரிசே தரலாம்
