WhatsApp கடந்த ஆண்டு சேனல்கள் அம்சத்தை அறிமுகப்படுத்தியது; இந்த அம்சம் பல்வேறு செய்தி நிறுவனகள் மற்றும் பிரபலங்களுக்கு ஒரு வகையான ப்ரோட்காஸ்ட்டிங் டூலாக செயல்பட்டு வந்தது.
சேனல் அம்சம் தற்போது வளர்ச்சிகண்டுள்ள நிலையில், தற்போது புதிய Update-களை WhatsApp நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
WhatsApp Group Chat-களில் சில காலமாக Poll நடத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உபயோகத்தில் உள்ளதைப் போல, சேனல்களிலும் இந்த வசதி தற்போது அறிமுகமாகியுள்ளது.
மேலும், சேனல் அட்மின் Voice Notes வடிவில் அப்டேட்களை அனுப்பி, பயனர்களுடன் நேரடியான வழியில் இணைக்க இப்போது Whatsapp அனுமதிக்கிறது.
இது தவிர, வாட்ஸ்அப் சேனல் அப்டேட்களை பயனர்கள் Status-ல் ஷேர் செய்யும் வகையிலும் புதிய Update தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது.
பயனர் ஷேர் செய்ய விரும்பும் சேனல் அப்டேட்டை நீண்ட நேரம் அழுத்தி ‘Forward’ என்பதைத் தேர்ந்தெடுத்து, தங்களது Status-ல் இனி பகிரலாம்.
மேலும், மிக முக்கிய சேனல் Update-ஆக, ஒரு குறிப்பிட்ட சேனலுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட Admin-களை சேர்க்கும் வசதியும் தற்போது அறிமுகமாகியுள்ளது.
முன்பு சேனலில் ஒரு Admin மட்டுமே இருக்கும் சூழல் இருந்த நிலையில், இப்போது சுமார் 16 Admin-கள் வரை சேர்க்க WhatsApp அனுமதிக்கிறது.