உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ்அப் இருந்து வருகிறது. பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு புதிய அப்டேட்கள் வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இயங்குதளமான வாட்ஸ்அப் செயலி, ஏற்கனவே உள்ள Video call வசதியில் பயனர்களை ஈர்க்கும் வகையில் புதிய வசதியை அறிமுகப் படுத்த திட்டமிட்டுள்ளது.
WABetaInfo தளத்தின் செய்தியின்படி, வீடியோ அழைப்புகளின் போது பயனர்கள் தங்கள் ஆடியோவை எதிர் முனையில் இருப்பவர்களுக்குப் பகிரும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்த உள்ளதாக கூறியுள்ளது.
வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்கும்போது பயனர் Play செய்யும் ஆடியோவை எதிர்முனையில் உள்ளவருக்கும் Play ஆகும் வகையில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது
தனிப்பட்ட வீடியோ கால்கள் மட்டுமன்றி, Group கால்களுக்கும் இந்த அம்சம் பொருந்தும். தற்போது இது சோதனையில் உள்ளதாகவும், விரைவில் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வாட்ஸ்அப் மற்றொரு அம்சத்தை கொண்டுவரவும் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. பயனர்கள் தங்கள் தொடர்பு விவரங்களைப் பகிராமல் ஒருவரையொருவர் இணைக்கும் புதிய வசதி விரைவில் கொண்டுவர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களை கண்டறிந்து இணைக்கும் செயல்முறையை எளிதாக்கும் அம்சத்தின் ஒரு பகுதியாக, பயனர்கள் தங்கள் சுயவிவரங்களை மறைத்து தொடர்பு கொள்ளும் விதத்தில் புதிய வசதி அறிமுகமாக உள்ளது.
மேலும், பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்கள் பயனர்பெயரை(UserName) மாற்றிக்கொள்ளவும் இந்த புதிய வசதி அனுமதிக்கும் என கூறப்பட்டுள்ளது.