மோசடிகளை கட்டுப்படுத்தும் வகையில், மொபைலில் ஆக்டிவ் சிம் கார்டு இல்லாவிட்டால் வாட்ஸ் அப் (whatsapp) கணக்கு இயங்காது என்று மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தவிர்க்க முடியாத வலைதளம் வாட்ஸ் அப்
தவிர்க்க முடியாத சமூக வலைத்தளங்களில் ஒன்றாக உள்ள வாட்ஸ் அப் சேவையை உலகம் முழுவதும் பல கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு மெசேஜ் அனுப்புவதில் தொடங்கி , வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் அழைப்புகள், மீட்டிங்குகள், தொழில் ரீதியான இணைப்புகள், குழுக்கள் என ஒவ்வொரு நிமிடமும் கோடிக்கணக்கானவர்களால் வாட்ஸ் அப், டெலிகிராம் செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
வாட்ஸ் அப் மோசடி புகார்
இந்நிலையில், இந்த வசதியை பயன்படுத்தி பல்வேறு மோசடிகளும் அரங்கேறுவதாக சமீப காலமாக புகார்கள் அதிகரித்து வருவதால், இதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப் பயன்படுத்த ஆக்டிவ் சிம் கார்டு கட்டாயம்
அதன்படி, மொபைலில் உள்ள சிம் கார்டு (mobile sim card), அந்தந்த செயலிகளில் இணைக்கப்பட்டிருப்பதை 90 நாட்களுக்கு ஒரு முறை சம்பந்தப்பட்ட செயலி உறுதி செய்ய வேண்டும் என்றும் அதேபோல் வாட்ஸ் அப் வெப் இல் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை தானாகவே Logout ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விதிமுறை டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகளுக்கும் பொருந்தும் என்றும் 6 மணி நேரம் கழித்து மீண்டும் கியூஆர் கோடு பயன்படுத்தி ஸ்கேன் செய்த பிறகுதான் வெப் வாட்ஸ் அப் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
