ரஜினிகாந்தின் திரையுலக வரலாற்றிலேயே மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் வந்த படம் ‘பாபா’. அந்தப் படம் யாரும் கொஞ்சமும் எதிர்பார்த்திராத வகையில் படுதோல்வி அடைந்ததும் அந்த தோல்வியை நடிகர் விஜய் தனக்கு வேண்டிய திரையுலக நண்பர்களை அழைத்து ஸ்டார் ஓட்டலில் பார்ட்டி வைத்து கொண்டாடினார் என்ற தகவகல் தமிழ்த்திரையுலகில் அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
சக நடிகர் ஒருவரின் தோல்வியை பார்ட்டி வைத்து கொண்டாடும் வன்மத்தை கண்டு திரையலகம் அதிர்ந்ததாத தகவலும் உண்டு.
அதன் பின்னர் ’காக்கா’ கதைகள் சொல்லும் அளவுக்கு அந்த வன்மம் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், #Thalaivar173 படத்தின் கதை விவாதத்தில் ஏற்பட்ட அதிருப்தியில் அப்படத்தில் இருந்து விலகிவிட்டார் இயக்குநர் சுந்தர்.சி. ஒரு படத்தில் கமிட் ஆகும் நடிகர்களோ, டெக்னீஷியன்களோ ஆரம்பத்திலேயே விலகுவது என்பதும், பாதியில் விலகுவது என்பது திரையுலகில் ஒன்றும் புதிதல்ல. ஆனால், தமிழ் திரையுலகின் இருபெரும் ஆளுமைகளாக இருக்கும் ரஜினி – கமல் படத்தில் இருந்து விலகுவது என்பது பல சலசலப்புகளை ஏற்படுத்தும் என்பது தெரிந்தும், அந்த விலகலை அறிக்கையின் மூலமாக சொல்லி அநாகரீகம் செய்யாமல், அந்த இருவரின் சம்மதத்துடன் அமைதியாக வேறு விதத்தில் தெரிவித்திருக்கலாம் என்பதுதான் பலரின் விமர்சனமாக உள்ளது.
சுந்தர் .சி அதைச் செய்யத் தவறியதால்தான் அவரைப் போட்டு பலரும் வறுத்தெடுத்து வருகின்றனர்.

தன் பட ஹீரோ ரஜினிக்கு பிடிக்கும் வரையிலும் கடை கேட்டுக்கொண்டே இருப்போம் என்று கமல் சொன்னதன் மூலம் சுந்தர் .சி சொன்ன கதையில் திருப்தி இல்லை என்று தெரிகிறது. இதையே சுந்தர்.சி கதை பிடிக்கவில்லை. அதனால் அவரை நீக்குகிறோம் என்று கமலும் ரஜினியும் அறிவித்திருந்தால் சுந்தர்.சிக்கு எப்படி வலித்திருக்கும்? என்று ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.
இந்த விவகாரத்தில் ரஜினிக்கும் கமலுக்கு தோல்வி ஏற்பட்டுவிட்டது மாதிரி, சுந்தர்.சியின் செயல் இருவரையும் காயப்படுத்தி விட்டது மாதிரி ஒரு தரப்பு சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறது.
அந்த தரப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ரஜினி- கமல் இருவருடனும் நீண்டகாலம் திரையுலகில் பயணித்து வரும் கவிஞர் வைரமுத்து ஒரு பதிவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

’’’சூப்பர் ஸ்டாரும்
உலக நாயகனும்
இந்தியக் கலையுலகின்
இருபெரும் ஆளுமைகள்
அவர்கள் இணைந்து
இயங்குவது என்பது
அட்லாண்டிக்கும் பசிபிக்கும்
ஆரத் தழுவிக்கொள்வது போன்றது
அவர்கள் தொட்டது
துலங்கவே செய்யும்
இயக்குநர் சுந்தர்.சி விலகியது
ஒரு விபத்தல்ல; திருப்பம்
அதில் யாரும்
கள்ளச் சந்தோஷம்
அடைய வேண்டாம்
வளைந்து செல்லும் நதி
ஒரு திருப்பத்திற்குப் பிறகு
வேகமெடுக்கும் என்பதே விதி
மாற்றம் ஒன்றே மாறாதது
‘அண்ணாமலை’ படத்தில்
வந்தேண்டா பால்காரன் பாடல்
எழுதுகிற வரைக்கும்
இயக்குநர் வசந்த் உடனிருந்தார்
ஏதோ ஒரு சூழலில்
அவர் விலக நேர்ந்தது
48 மணி நேரத்திற்குள்
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்
தன் இன்னொரு சீடனை
இயக்குநர் ஆக்கினார்;
சுரேஷ் கிருஷ்ணா
அது
ரஜினி வரலாற்றில்
தடம்பதித்த படமாயிற்று
இந்த மாற்றமும்
அப்படியொரு வெற்றியை எட்டலாம்
குழப்பம் கொடிகட்டும்
இந்தப் பொழுதில்
இருபெரும் கலைஞர்களுக்கும்
நாம் ஊக்கமும் உற்சாகமும்
ஊட்ட வேண்டும்
ஏனென்றால்
அரைநூற்றாண்டுக்கு மேல்
மக்களுக்கு மகிழ்ச்சிகொடுத்த
கலைஞர்கள் அவர்கள்
தொடருங்கள் தோழர்களே!
இப்படை தோற்கின்
எப்படை வெல்லும்?’’என்ற வரிகள் மிக கவனக்கத்தக்கதாக உள்ளது.

சுந்தர்.சி விலகியது விபத்தல்ல என்றால் அது ஒரு திட்டமிட்ட நிகழ்வா? அரசியல் காரணம் என்று ஒரு கருத்து இருப்பதை இது நிரூபணம் செய்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.
இந்த சர்ச்சையில் கள்ளச் சந்தோஷம் அடைவது யார்? என்பதை வெளிப்படையாக வைரமுத்து சொல்லாவிட்டாலும் கூட அது யார் என்பதை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
